உரிமைகளையும் , உணர்வுகளையும் முன்வைக்கும் விளம்பரங்கள் !
இந்தி திணிப்பை லேசாகக் கிண்டலடிக்கும் ‘டெய்ரி மில்க்’ விளம்பரத்தைத் தொடர்ந்து இந்துத்துவ எதிர்ப்பையும் மத நல்லிணக்கத்தையும் மென்மையாக முன்வைக்கும் ‘சர்ப் எக்ஸெல்’ விளம்பரம் வெளியாகியுள்ளது.

ஒரு கருத்தியல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும்போதுதான், அதற்கு ஒரு வணிக மதிப்பு உண்டு என்ற நிலை உருவாகும்போதுதான் வணிக நிறுவனங்கள் அதைக் கையிலெடுக்கும். பா.இரஞ்சித், வெற்றிமாறன் திரைப்படங்கள் வெற்றிபெற்றபிறகு, சாதிப்பிரச்னையை மையமாக வைத்தும், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களைக் குறியீடாக ஆங்காங்கே பயன்படுத்தியும் பல திரைப்படங்கள் வரத்தொடங்கியது ஒரு சமீபத்திய உதாரணம்.
இப்போது மொழியுரிமை , மதநல்லிணக்கம் என்பது தேசிய அளவில் செல்வாக்கு பெறாமல் இத்தகைய விளம்பரங்கள் வெளியாகச் சாத்தியமில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் 60களில் இந்தி திணிப்பு என்பதற்கு மொழியாதிக்கம் என்பதுடன், ‘இந்தியா முழுக்க ஒரே பொதுமொழி என்றால் விளம்பரம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ஒரே மொழியைப் பயன்படுத்தலாம்’ என்பது போன்ற முதலாளித்துவ லாப நோக்கங்களும் காரணங்களாக இருந்தன. ஆனால் இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் மொழிமாற்றம் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்பதால் இந்தி திணிப்பு ஆதரவு என்பதை தேசிய முதலாளிகளும் கைவிடுகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகவும் இந்த விளம்பரங்களை எடுத்துக்கொள்ளலாம்.
— சுகுணா திவாகர்.