போக்குவரத்துத் துறை  –  பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரியலூர் – போக்குவரத்து கழக பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதாரர்களுக்கு (4 மகளிர் உட்பட) பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (25.11.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள் கலந்துகொண்டனர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

போக்குவரத்துத் துறை  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதார்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார். அதன்படி 4 மகளிர் நடத்துநர் உட்பட 25 நபர்களுக்கு நடத்துநர் பணிக்கான ஆணைகளையும், 2 ஓட்டுநர் பணிக்கான ஆணைகளையும் மற்றும் 1 தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான ஆணையினையும் வழங்கினார்.

போக்குவரத்துத் துறை  அந்த வகையில் கும்பகோணம் மண்டலத்தில் 5 நடத்துநர் பணியிடத்திற்கும், நாகப்பட்டினம் மண்டலத்தில் 3 நடத்துநர்களுக்கும், திருச்சி மண்டலத்தில் 2 மகளிர் உட்பட 6 நடத்துநர்களுக்கும், கரூர் மண்டலத்திற்கு 2 நடத்துநர்களுக்கும், காரைக்குடி மண்டலத்தில் 1 ஒட்டுநர் மற்றும் 1 மகளிர் உட்பட 6 நடத்துநர்களுக்கும், புதுக்கோட்டை மண்டலத்தில் 1 ஒட்டுநர் மற்றும் 1 மகளிர் உட்பட 3 நடத்துநர்களுக்கும், 1 தொழில்நுட்ப பணியாளருக்கும் இன்றையதினம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர்ந்து,  இலகுரக வாகன பயிற்சி வாகனத்தினையும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலகுரக வாகன பயிற்சிக்கு நபர் ஒருவருக்கு (ஜி.எஸ்.டி உட்பட) ரூ.7080 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பயிற்சிக் காலம் 22 நாட்களாகும். (செயல்முறை பயிற்சி காலம் 25 மணி நேரம் மற்றும் நேர்முக வகுப்பு 5 மணி நேரம்). முகவரி மாற்றத்திற்கான கட்டணம் தனியாக பயிற்சி பெறுபவர் செலுத்திக்கொள்ள வேண்டும் (தோராயமாக) ரூ.600 ஆகும்.

போக்குவரத்துத் துறை  இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நிர்வாக இயக்குநர் (கும்பகோணம்) இரா.பொன்முடி அவர்கள், திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொதுமேலாளர் (கூட்டாண்மை தொழில்நுட்பம்) சிங்காரவேலன், துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ரெங்கராஜன், துணை மேலாளர் (வணிகம்-கூட்டாண்மை) இராமநாதன், துணை மேலாளர்கள் சுரேஷ் (வணிகம் திருச்சி மண்டலம்), சுவாமிநாதன் (தொழில்நுட்பம் திருச்சி மண்டலம்), ரவி (பணியாளர் & சட்டம் திருச்சி மண்டலம்)  பத்மகுமார் (பணியாளர் & சட்டம் காரைக்குடி மண்டலம்), அனைத்து மண்டல உதவி மேலாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.