சாலை விபத்தில் உயிரிழந்த த.வெ.க. நிர்வாகி – கண்ணீர் விட்டு கதறியழுத புஸ்ஸி ஆனந்த் !
மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உடலுக்கு அக்கட்சியின் பொது செயலாளர் N.ஆனந்த் அஞ்சலி செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் UPM. ஆனந்த் நேற்று இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து மதுரை பொன்மேனி இராஜம் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட UPM.ஆனந்தின் உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் N.ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் UPM. ஆனந்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறிய N.ஆனந்த் UPM ஆனந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் N.ஆனந்த் , “தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் சகோதரர் UPM.
ஆனந்த் உயிரிழந்தது தமிழக வெற்றிக் கழகத்திற்கு பேரிழப்பாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். UPM. ஆனந்த் தளபதியின் தொண்டன் என்பதை நிரூபிக்கும் வகையில் கண்தானம் வழங்கியுள்ளார்” என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.