விடுதலைக்காக பாடுபட்ட போராட்ட வீரர்களுக்கு எந்தவித தொய்வுமின்றி சிறப்பு பயணச்சலுகைள் வழங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள்,  தமிழ்மொழி, தமிழ்வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ்மொழி, தமிழ்வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் வயது முதிர்வு காரணமாக, தனியாக பேருந்தில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மேலும்இ 01.06.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் கட்டணமில்லா பயண சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்துத்துறை
போக்குவரத்துத்துறை

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

மேற் குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள் பின்பற்றவில்லை எனத் தெரியவருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்சு தந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ்மொழி, தமிழ்வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தால், இனிவரும் காலங்களில் பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மற்றும் ஓட்டுநர் / நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

வெளியீடு:

இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்புத்துறை,

சென்னை-9       

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.