‘விடுதலை-3’—ஆம்  பாகமா?

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கதையின் நாயகனாக சூரியை மட்டும் போட்டு நான்கு கோடி பட்ஜெட் திட்டம் போட்டு  ‘விடுதலை’ படத்தை ஆரம்பித்தார் டைரக்டர் வெற்றிமாறன். அதன் பின் கதைக்குள் விஜய் சேதுபதியைக் கொண்டு வந்த பின் படத்தின் பட்ஜெட் 40 கோடியானது, படத்தின் மொத்த ஃபுட்ஜேஜும் 5 மணி நேரமானதால், விடுதலையை இரண்டு பாகங்களாக்கி, முதல் பாகத்தை 2023 மார்ச்சில் ரிலீஸ் பண்ணினார் வெற்றிமாறன்.

விடுதலை
விடுதலை

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதன் பின் கதையிலும் காட்சியிலும் மாற்றங்களுக்கு மேல் மாற்றம், சேர்க்கைக்கு மேல் சேர்க்கை என நீ………ண்டு கொண்டே போனதால், ஒன்றரை வருடங்கள் கழித்து ஒருவழியாக இந்த செப்டம்பரில் ‘விடுதலை-2’ ஆம் பாகத்தை முடித்து டப்பிங் வேலைகளையும் இந்த அக்டோபர்-10—ஆம் தேதி  தொடங்கி, டிச.20—ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளார் வெற்றிமாறன்.

இந்த இரண்டாம் பாகமும் கிட்டத்தட்ட நான்கரை மணி நேரங்கள் ஃபுட்டேஜ் இருக்காம். அதனால ‘விடுதலை-3’ஆம் பாகமும் வர வாய்ப்பு இருக்கு என்கிறார்கள் கோலிவுட்டில்.

 

— மதுரை மாறன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.