குவாட்டர்  பாட்டில்கள் ரூ. 1500 லஞ்சப் பணம் + கணக்கில் வாராத பணத்துடன் சிக்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ! 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குவாட்டர் பாட்டிகள் ரூ. 1500 லஞ்சப் பணமும் கணக்கில் வராத தொகையுடன் சிக்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சலிக்காமல் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்து அதிரடி காட்டி வரும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோவிந்தன் நகரைச் சேர்ந்தவர் குருசாமி (48) இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார், கடந்த மதம் ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணிபுரியும் சந்திரசேகரன் (58) குருசாமியின் பெட்டி கடையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய வந்துள்ளார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

கடைகளில் ஆய்வு செய்யும் கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன்
கடைகளில் ஆய்வு செய்யும் கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன்

அப்போது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் இல்லாததால் எப்படி சான்றிதழ் இல்லாமல் கடையை நடத்தலாம் என மிரட்டும் தோனியில் சந்திரசேகர் பேசியுள்ளார், பின்னர் கடைக்காரரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்றால் ரூ. 7500 இலஞ்சமாக கொடுத்தால் நானே சான்றிதழ் தயார் செய்து தருவதாக தெரிவிக்கவே என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது இந்த கடையில் சொல்லும்படி வியாபாரமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

திடீரென மனமிரங்கிய அதிகாரி சந்திரசேகரன் ஆடி ஆஃபர் போல் இலஞ்ச பணத்தை பாதியாக ரூ.3500 மட்டும் கொடுங்கள் போதும் என கேட்கவே கடைக்காரர் அதுவும் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்,

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அங்கிருந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீண்டும் கடந்த 2 ஆம் தேதி அந்த பெட்டி கடைக்காரரிடம் வந்து ரூ.1500 உங்களுடைய ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்குமாறு கேட்டு தொந்தரவு செய்யவே மிகுந்த மன வேதனை அடைந்த கடைக்காரர் நீங்கள் கேட்ட பணத்தை தயார் செய்துவிட்டு அழைப்பதாக தெரிவித்த பின்னர் தான் அங்கிருந்து சென்றார்உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சந்திரசேகரன்.

கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன்
கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன்

பின்னர் இது தொடர்பாக குருசாமி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கவே அவர்களின் வழிகாட்டுதல்படி நேற்று 11.07.2024  சரியாக 1 மணி அளவில் பெட்டிக்கடைக்காரர் குருசாமி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரனை அவருடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை தயார் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேராக என் அலுவலகத்திற்கு வந்து கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அங்கு அலுவலகத்திற்குச் சென்ற கடைக்காரர் இலஞ்ச பணத்தை கொடுக்கவே அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரனிடமிருந்து ரசாயனம் தடவப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து
அவர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் மேலும் கணக்கில் வராத பணம் ரூ. 10500 ரொக்கமும் மதுபாட்டில்களும் சிக்கின இவற்றை எல்லாம் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே ஏப்ரல் 26 ஆம் தேதி இதே நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் ஜோதிமணியை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மாரீஸ்வரன் 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.