சோஷியல் மீடியா சீட்டிங்ஸை அம்பலப்படுத்தும் ‘டிரெண்டிங்’
‘ராம் பிலிம் ஃபேக்டரி’ பேனரில் மீனாட்சி ஆனந்த் தயாரித்து வருகிற 18—ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘டிரெண்டிங்’. சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம்குமார், பெசண்ட் ரவி, ஷிவன்யா பிரியங்கா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்போது சோஷியல் மீடியாக்களில் நடக்கும் அத்துமீறல்கள், அக்கப்போர்கள், லைக்ஸ், சப்ஸ்கிரைப் சீட்டிங்குகளை அம்பலப்படுத்துகிறது இந்த ‘டிரெண்டிங்’.
படத்தின் டிரைலர் & பாடல்கள் வெளியீட்டு விழா, ஜூலை 09-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்..
தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த்,
“சிவராஜ் இந்தக் கதையை சொன்னதுமே எனக்குப் பிடித்து ஓகே சொல்லிட்டேன். கலையரசன் மிகச் சிறந்த நடிகர். இவர் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். சாம் சி.எஸ். சிறப்பான இசையைத் தந்துள்ளார். எங்களின் இந்த சின்ன முயற்சி, முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவு தேவை”.
ஒளிப்பதிவாளர் பிரவீன்,
“நான் மீடியாவிலிருந்து சினிமாவுக்கு வந்து இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி. சிவராஜும் நானும் சில குறும்படங்களில் இணைந்து வேலை செய்துள்ளோம், இப்படம் இக்கால டிரெண்டிங்கைப் பேசுவதால் உங்களுக்குப் பிடிக்கும்”.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகர்கள் பிரேம்குமார், பெசண்ட் ரவி, அலெக்சாண்டர், மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ்., ஹீரோயின் பிரியாலயா ஆகியோர் இந்த டிரெண்டிங் டிரெண்ட் செட்டராகும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இயக்குனர் சிவராஜ்,
“நான் இந்த இடத்திற்கு வரக்காரணம் கேமராமேன் பிரவீன் தான். சோஷியல் மீடியாவில் அதீத ஆர்வம் உள்ள தம்பதிகளைப் பற்றிய கதை இது. உருவாக்கத்தில் இது சின்ன படம் தான், ஆனால் பேசியுள்ள விஷயத்தில் பெரிய படம். மக்களின் மனதில் ‘டிரெண்டிங்’காக இருக்கும் என நம்புகிறேன்”.
ஹீரோ கலையரசன்,
“இயக்குனர் சிவராஜ், போலீசாக இருந்தவர் என்பதால் இந்த டிரெண்டிங்கை ஸ்பெஷலாக எடுத்துள்ளார். மிகக்குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு, இரண்டு மணிநேரம் ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைப்பது அவ்வளவு சுலபமல்ல. அதை சிவராஜ் செய்துள்ளார். இன்றைக்கு சோஷியல் மீடியா என்னும் டேஞ்சர் ஒரு குடும்பத்திற்குள் புகுந்து என்ன பாடுபடுத்துகிறது என்பதை டீடெய்லாகவும் த்ரிலிங்காகவும் சொல்லியுள்ளோம். படம் பாருங்கள், மனமுவந்து ஆதரவு தாருங்கள்”.
— மதுரை மாறன்