பழங்குடியினர் தொடர்பான ஆரய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு – தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா அவர்கள் பழங்குடியினர் தொடர்பான ஆரய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம். முனைவர் பட்ட மேலாய்வு மாணவ – மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “ தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ – மாணவிகளுக்கு மாதம் ரூ.10,000/- ம் (6 மாதத்திற்கு) மற்றும்  முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000/-ம் (3 வருடத்திற்கு) உதவித்தொகையாக வழக்கப்படும்.

அங்குசம் இதழ்..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை ‘https://www.tn.gov.in/forms/deptname/l’ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025ம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் நேற்று (5ம் தேதி) முதல் இணையவழியிலும் மற்றும் இயனமுறையிலும் (ஆப்லைன்) வரவேற்கப்படுகின்றன.

இணையவழியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7 என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும் மற்றும் இயன்முறையில் விண்ணப்பிக்க விரும்பும் ‘https://www.tn.gov.in/forms/deptname/l என்ற இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர், பழங்குடியினர் நலன். சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு 30.11.2024க்குள் அனுப்பி வைத்து இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.