பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலி
தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் சின்னத்திரை விவேகானந்தர் ரமேஷ் பிரபா, டாக்டர் மீனா, டாக்டர் சேகர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஸ்கின் பாலா என்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகிய நால்வரும் சிறப்பு பேச்சாளர்கள். மேடையில் என்னை பாராட்டிப் பேசும் போது பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஐயா, “அறிமுக அறிவிப்பாளர் அரிய சாமி “எங்கள் நால்வரில் யாரை முதலில் பேச அழைப்பார் என்று எங்களுக்கே தெரியாது. என்று அவர் சொல்லும் போது எனக்கு பெருமையாக இருக்கும்.
அந்த அருமை பெருமைகளை எல்லாம் விட்டு விட்டு இன்று விருதுநகரில் அவமானப்பட்டு கொண்டிருக்கிறேன். ஐஏஎஸ் பணி நியமன நேரடி தேர்வில் இவரும் ஒரு சிறப்பு அழைப்பாளராக செயல்பட்டவர். காரில் செல்லும்போது இவற்றையெல்லாம் என்னிடம் அசை போடுவார். ஒரு மிகப்பெரிய பேராசான் இன்று இவ்வுலகில் இல்லை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். நாளை அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலையில் நான் விருதுநகரில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
— அரியசாமி – மூத்த பத்திரிகையாளர்