ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திருச்சி சமூக ஆர்வலர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உலகத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில், 288 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இக்கோர சம்பவம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு திருச்சிராப்பள்ளி திருவரம்பூரில் சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாநகர வளர்ச்சி பெரும் குழுமம் ஒருங்கிணைப்பாளர் பொன் குணசீலன்,இணைந்த கைகள் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், பத்து ரூபாய் இயக்கம் பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜ், பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் காசிநாதன், சமூகப் பணியாளர்கள் கோவிந்தசாமி, நவீன் மணி, செல்வராஜ், பத்து ரூபாய் இயக்க மாநில செயலாளர் சதீஷ்குமார், மாநில துணை பொதுச்செயலாளர் டெஸ்மா வீரபாண்டியன்,மாவட்ட செயலாளர் சேட்டு, சாலை பயனீட்டாளர் அமைப்பு நிறுவனர் ஐயாரப்பன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், லைப் ஜோன் ஆப் பிஹெச்இஎல் பொதுச் செயலாளர் பூபாளன், அகவிழி ஆள்வோர் இயக்க ரவிக்குமார், அணுகு சாலை கூட்டமைப்பு நடராஜன், மச‌உச இயக்கம் லிவிங்ஸ்டண் தாஸ், ஆழம் விழுதுகள் அறக்கட்டளை பாண்டியன், அம்மன் நகர் நலச் சங்க ஆலோசகர் விஜயகுமார், அணுகு சாலை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உட்பட பல்வேறு, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.