தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை

இணைந்த கைகள், மாநகர வளர்ச்சி பெருங்குழுமம் மற்றும் பத்து ரூபாய் இயக்கம் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறையினை திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடந்தியது இணைந்த கைகள் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் வரவேற்றார்.

தீபாவளி வாழ்த்துகள்

மாநகர வளர்ச்சி பெரும் குழுமம் ஒருங்கிணைப்பாளர் பொன் குணசீலன் தலைமை வகித்தார்.
பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் காசிநாதன், சமூகப் பணியாளர்கள் கோவிந்தசாமி, நவீன் மணி, செல்வராஜ், பத்து ரூபாய் இயக்க மாநில செயலாளர் சதீஷ்குமார், மாநில துணை பொதுச்செயலாளர் டெஸ்மா வீரபாண்டியன்,மாவட்ட செயலாளர் சேட்டு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை

பத்து ரூபாய் இயக்கம் பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பேசுகையில், அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடைமையை மேம்படுத்தவும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றால் குறித்த தகவல்களை பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை வழங்க வகை செய்வதோடு ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதா ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காப்பதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும். தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்தத் தகவல்களைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும் அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர வேறு தனிப்பட்ட விவரங்களை கோரக்கூடாது.

அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும் பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம்.

தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்றார்.
சாலை பயனீட்டாளர் அமைப்பு நிறுவனர் ஐயாரப்பன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், லைப் ஜோன் ஆப் பிஹெச்இஎல் பொதுச் செயலாளர் பூபாளன், அகவிழி ஆள்வோர் இயக்க ரவிக்குமார், அணுகு சாலை கூட்டமைப்பு நடராஜன், மச‌உச இயக்கம் லிவிங்ஸ்டண் தாஸ், ஆழம் விழுதுகள் அறக்கட்டளை பாண்டியன், அம்மன் நகர் நலச் சங்க ஆலோசகர் விஜயகுமார், சமூகப் பணியாளர் மகளிர் குழு மல்லீஸ்வரி மணிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். நிறைவாக அணுகு சாலை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.பல்வேறு, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.