“பிளாஷ்டிக் எனும் எமன் ” கையேடு, துணிப்பையுடன் விழிப்புணர்வு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா “பிளாஷ்டிக் எனும் எமன் ” விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடை மக்கள் சக்தி இயக்கம் மாநிலப்பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமையில் நடைபெற்றது. அதில், 2023ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத் தின் கருப்பொருள் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வதற்கு உரிய தீர்வுகள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இந்த கருப்பொருள் வலியுறுத்தும் விழிப்புணர்வு படி நாம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக்குறைத்து, பிளாஸ்டிக் மாசு ஏற்படாமல் காக்க வேண்டும்.

தண்ணீர் அமைப்பு
தண்ணீர் அமைப்பு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சுற்றுச்சூழலின் நலனை சீர்துாக்கிப் பார்த்து, இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாந் றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலத சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற் சாலைக்கழிவுகள் மற்றும் வாகனப் புகை யாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி மேலும் மேலும் இந்த பூமியில் `சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்குத்தான் ஆபத்து விளைவிக்கும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சுற்றுச்சூழல் சமநிலை என்பது மனிதர் கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இந்த சம நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும்.

தண்ணீர் அமைப்பு
தண்ணீர் அமைப்பு

நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி முன்னோர் வழிபட்டதால், அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம் என்றார்.

தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் மாணவர்களிடையே பிளாஷ்டிக் நெகிழி யின் தீமைக் குறித்தும் பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து நீர் நிலைகளில் மண்டிக்கிடக்கும் நெகிழிகள் சிற்றுயிர்கள் தொடங்கி பேருயிர்கள் வரை ஏற்படுத்தும் தீங்குகளை எடுத்துரைத்து நெகிழிப் பயன்பாடுகளின் பெருந்தீமை குறித்து உரையாற்றினார்.

தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் . ஆர்.கே.ராஜா, சாத்தனூர் குமரன், ஆசான் கார்த்திக், சந்தியா, ஹேமா , சர்மிளா, அகிலா உள்ளிட்ட சிலம்பம் மாணவர்கள் பங்கேற்றனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.