திருச்சி – வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக வைத்திட கலெக்டா் அறிவிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளா் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணியின் தொடா்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஓர் வாக்காளா் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருப்பதை நீக்கிட ஏதுவாக வாக்காளா்களின் பெயா் மற்றும் இதர விவரங்கள் ஒரே மாதிாியாக உள்ள இனங்களை கணினி மூலம் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாக்காளா்களின் பெயா்கள் இரட்டைப் பதிவாக வாய்ப்புள்ள 187748 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  அவ்வாறு இனம் காணப்பட்ட வாக்காளா்களுக்கு மட்டும் தற்போது அறிவிப்புகள் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தினால் தொிவிக்கப்பட்டவாறு பிரத்யேக படிவத்தில் (படிவம் – A) அறிவிப்புகள் உாியவாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவிவாக்காளா் பதிவு அலுவலா்களால்  கையொப்பமிடப்பட்டு, சம்மந்தப்பட்ட வாக்காளா்களுக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும் பணியானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Srirangam MLA palaniyandi birthday

மேற்படி அறிவிப்பினை பெற்றவாக்காளா்கள் படிவம் – A அறிவிப்புடன்  இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் கடிதத்தில் (Confirmation Letter) தாங்கள் தற்போது சாதாரணமாக வசிக்கும் முகவாி அல்லது தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் எந்தமுகவாியில் இடம்பெறவேண்டும் எனவிரும்பும் முகவாியினைமட்டும் தொிவு செய்து பேனா மையினால் தெளிவாக தொியும்படி விரும்பும் முகவாியின் மேல்பகுதியில் அதற்குாிய கட்டத்தில் டிக்( ✔) மாா்க் செய்து கையொப்பம் இட வேண்டும். பின்னா் மேற்படி உறுதிப்படுத்தும் கடிதத்தினை (Confirmation Letter) சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் / வருவாய் கோட்டாட்சியா் அல்லது சம்மந்தப்பட்ட உதவிவாக்காளா் பதிவு அலுவலா் / வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு மீள நோிலோ அல்லது தபால் மூலமாகவோ மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவோ தவறாது அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாக்காளா் பதிவு அலுவலரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவம் – A அறிவிப்பு கிடைக்கப்பெற்ற வாக்காளா்கள் அனைவரும் மேற்படி அறிவிப்பு கிடைக்கப்பெற்ற ஏழு (7) தினங்களுக்குள் மேற்கண்டுள்ளவாறு த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 0431 – 2419929 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அறிவிப்பு கிடைக்கப்பெற்ற வாக்காளா்கள் படிவம் – A அறிவிப்புடன்  இணைத்து வரப்பெற்ற உறுதிப்படுத்தும் கடிதத்தினை (Confirmation Letter) முழுமையாக மேற் குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்து மீள சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைத்து, வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக வைத்திட தக்க ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தோ்தல் அலுவலா் / மாவட்டஆட்சித்தலைவா் மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவா்கள் தொிவித்துள்ளார்.

 

வெளியீடு:

உதவி இயக்குநா்,

செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.