திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனம்.

திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டெல்டா மாவட்டத்தில் முதல்முறையாக Apollo Health Check on Wheels எனப்படும் நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை கே.கே. நகர் பகுதியில் காவல்துறை ஆணையர் சத்யபிரியா தொடங்கி வைத்தார். காவல்துறையினருக்கு பிரத்தியேகமாக 13ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சுமார் ஒரு வார காலம் பிரத்யேக பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

trichy apollo hospital
trichy apollo hospital

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த முழு உடல் பரிசோதனை கூடத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ,இதய அழுத்த சோதனை ,ஆடியோமெட்ரி, ECHO, ECG, இரத்தப் மாதிரி சேகரிப்பு போன்ற முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படும் வசதி உள்ளது. இந்த முகாம் முடிவடைந்ததும் அனைத்து ஊழியர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த நடமாடும் பரிசோதனை கூடம் செயல்படும் என்று அப்பல்லோ நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

ap
ap

இந்த தொடக்க விழாவில் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மூத்த பொது மேலாளர் மற்றும் திருச்சி தலைமை நிர்வாகி சாமுவேல், மாவட்ட மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம் ,மார்க்கெட்டிங் மேனேஜர் ஆனந்த ராமகிருஷ்ணன், பொது மேலாளர் சங்கீத் உட்பட அப்பல்லோ நிர்வாகத்தினர் மற்றும் தெற்கு டி.எஸ்.பி செல்வகுமார், வடக்கு டி.எஸ்.பி அன்பு, கூடுதல் துணை ஆணையர் விக்னேஸ்வரன், உதவி ஆணையர் (ஐ எஸ்) செந்தில்குமார், கே.கே நகர் உதவி ஆணையர் சுரேஷ்குமார் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். காவலர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று இந்த முகாமில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.