சமத்துவத்தை நோக்கி … கலைக்காவிரியின் கலைவிழா !
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் கிளாசிக் ஃபெஸ்ட் 2025 கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழா போட்டி “சமத்துவத்தை நோக்கி ” என்ற தலைப்பில் நடைபெற்றது போட்டியின் தொடக்க விழாவில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். வி அல்லி அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் செயலர் அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ அவர்கள் தலைமை வகித்தார் முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து பத்து வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றது.
செவ்வியல் நடனம் தனிநபர், செவ்வியல் குரல் இசை தனிநபர் ,மெல்லிசை குரலிசை தனிநபர், மெல்லிசை குரலிசை குழு, கருவி இசை, தாளக் கருவிசை, ரங்கோலி, வண்ண ஓவியம் தீட்டுதல், நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற நடனம் என பத்து வகையான போட்டிகள் நடைபெற்றது .இந்நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்று அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். 25 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கெடுத்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பரிசு வென்றனர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் எம் .வி அல்லி அவர்கள் கலைகள் இளைய சமுதாயத்தின் திறன்களை ஒருங்கிணைக்கிறது செம்மைப்படுத்துகிறது .
இந்த இளம் வயதில் மாணவர்கள் கலைத்துறையில் ஈடுபடுகின்ற பொழுது அவருடைய ஆற்றல் அவருடைய அறிவுத்திறன் அவருடைய ஆளுமை மேம்பாடு அடைகிறது எனவே “சமத்துவத்தை நோக்கி ” என்கின்ற தலைப்பில் கலைவிழா நடைபெறுவது காலத்திற்கு ஏற்ப பொருத்தமானது. மாணவர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சமத்துவ சமுதாயத்தை படைத்திட கலைகள் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இணைப்புச் சங்கிலி ஆக அமையும் என்று சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆயிஷா மருத்துவமனையினுடைய மருத்துவர் குடியரசுத் தலைவர் விருது பெற்ற டாக்டர் M.S.அஷ்ரப் எம்.டி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அவரது சிறப்புரையில் இக்கல்லூரி தொடக்கத்தில் சிறு பள்ளியாக தொடங்கி இன்றைக்கு நுண்கலைக் கல்லூரியாக வளர்ச்சிப் பெற்று கலை வளர மனிதம் மலர என்கின்ற ஒப்பற்ற நோக்கத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பாக தன் பயணத்தை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார். அறிவு என்பது பாடப்புத்தகத்தில் மட்டுமல்ல பாடப் புத்தகத்தை கடந்து மாணவர்களுக்கு அறிவும் திறமையும் பாடப் புத்தகத்தை கடந்து வெளியே கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைக்கு நெறிமுறைக் கல்வி, நுண்கலை அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் அவர்கள் ஆர்வம் காட்டினால் ஆகச் சிறந்த மாணவர்களாக உருவாக முடியும்.
கல்வித்துறையில் 100 சதம் வெற்றி பெறுகின்ற மாணவர்களால் கலைத்துறையில் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது. தொடர்ந்து பயிற்சியும் அயராத முயற்சியும் உள்ளவர்களே கலைத்றையில் ஈடுபாட்டுடன் பங்கேற்று வெற்றி பெற முடியும். இந்தத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறவர்கள் தங்கள் பெற்றோர்களை போற்றி பாதுகாத்து அவர்களுக்குரிய மரியாதையை காலமுள்ளவரை மதிக்கின்ற உயர்ந்த பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் சிறப்புரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிஷப் ஈபர் கல்லூரியும் முதல் இடத்திற்கான சாம்பியன் வெற்றிக் கோப்பையை ஸ்ரீமத் ஆண்டவன் கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் தட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு செயலர் தந்தை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர் .
நன்றியுரையை குரலிசைத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜேஷ் பாபு அவர்கள் வழங்கினார். நிகழ்வை நடனத்துறை மாணவர்கள் செல்வி. அர்ச்சனா செல்வி. சாய் சுபப் பிரதா, மற்றும் இசைத்துறை செல்வி .வின்சி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.