திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதியில் 43,115 வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் !
திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதியில் 43,115 வாக்காளர் பட்டியலில் நீக்கம் !
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 10,99,977 பெண்கள் 11,60,256, மூன்றாம் பாலினம் 206, என மொத்தம் 22 இலட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் 22,97,106, பேர் பட்டியலில் இருந்தனர். இதன் பின்பு புதிதாக 6,448 பேர் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை 3377 பேர் , ஸ்ரீரங்கத்தில் 4389 பேர் , திருச்சிராப்பள்ளி மேற்கு 5367 பேர், திருச்சி கிழக்கு 5779 பேர், திருவெறும்பூர் 10153 பேர், லால்குடி 3331 பேர், மண்ணச்சநல்லூர் 2092 பேர், முசிறி 2499 பேர், துறையூர் 6128 பேர், என மொத்தம் 43,115 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 9 தொகுதியில் இறந்ததாக 23954, இடமாற்றம் 14,971, இரட்டை பதிவு 4190 என நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அதே நேரத்தில் இந்த மாதம் 21.22, டிசம்பர் மாதம் 12. 13, ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ளுங்க்ள். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது. வாக்காளர் பட்டியில் உங்கள் பெயர் அவசியம் இருக்க வேண்டும். பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று உறுதியாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் இராவணன், நடராஜன், அருள்ஜோதி, பத்மநாபன், ஐயப்பன், திமுக சார்பில் அன்பழகன், வைரமணி, மோகன்தாஸ், காங்கிரஸ் சார்பில் ரெக்ஸ் . பிஜேபி சார்பில் பெருமாள்சங்கர், தேமுதிக சார்பில் திருப்பதி, சி.பி.ஐ. சார்பில் சுரேஷ், சி.பி.எம். சார்பில் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.