பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவா் எச்சரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆங்காங்கு குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

கலெக்டா் எச்சாிக்கை
கலெக்டா் எச்சாிக்கை

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறும் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட வேண்டும் என இதன் வழி தெரிவிக்கப்படுகிறது. இவ்வழிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட அரசுதுறை அலுவலகங்கள்/ இணையதளங்களில் பதிவு செய்ய விண்ணப்பிக்க இன்றுமுதல் ஒருமாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது. இத்தகைய இல்லங்கள்/ விடுதிகள்/ காப்பகங்கள் பதிவு செய்திட ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவே இறுதி எச்சரிக்கை என்பதையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யாத இல்லங்கள்/ விடுதிகள்/ காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

. எண் விடுதிகள் () இல்லங்களின் வகை சம்பந்தப்பட்ட துறை பதிவு மற்றும் உரிமம் பெறும் சட்டம்
1 குழந்தைகள் இல்லங்கள் குழந்தைகள்

நலன்(ம) சிறப்புசேவைகள்

இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015.

 

2 முதியோர் இல்லங்கள் சமூகநலத்துறை மூத்தகுடிமக்களுக்கானசட்டம் 2007

 

3 மனவளர்ச்சிகுன்றியவர்களுக்கான இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016.

 

4 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016.

 

5 போதைப் பொருட்களுக்குஅடிமையானவர்களுக்கானமறுவாழ்வு இல்லங்கள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental

Health Authority)

மனநலபாதுகாப்புச் சட்டம் 2017

 

6 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானவிடுதிகள் சமூகநலத்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானவிடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம் 2014.

 

7 மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental

Health Authority)

மனநலபாதுகாப்புச் சட்டம் 2017

 

 

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதுநாள் வரை பதிவு செய்யாத இல்லங்கள்/ விடுதிகள்/ காப்பகங்கள் முறையாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி மற்றும் அலுவலகம் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

 

. எண் விடுதிகள் () இல்லங்களின் வகை விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்/அலுவலகம்

 

 

1 குழந்தைகள் இல்லங்கள் https://dsdcpimms.tn.gov.in (அல்லது) மாவட்ட குழந்தை நல அலுவலகம்

 

2 முதியோர் இல்லங்கள் www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது) மாவட்ட சமூகநல அலுவலகம்

 

3 மனவளர்ச்சிகுன்றியவர்களுக்கான இல்லங்கள் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம்

 

4 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம்

 

5 போதைப் பொருட்களுக்குஅடிமையானவர்களுக்கானமறுவாழ்வு இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

6 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானவிடுதிகள் https://tnswp.com(அல்லது) மாவட்ட சமூகநல அலுவலகம்.

 

7 மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பகவளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

 

தன்படி பதிவுசெய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள்/விடுதிகள்/காப்பகங்கள் முதலானவை உடனடியாக மேற்காணும் இணையதளம் (Portal) /அலுவலகம் வாயிலாக ஒருமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.  அவ்வாறு ஒருமாதகாலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இல்லங்கள்/விடுதிகள்/காப்பகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று இதன் மூலம் கடைசி முறையாக எச்சரிக்கப்படுகிறது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.