திருச்சியில் புகாரை வாங்க மறுத்த எஸ்ஐ நடவடிக்கை எடுத்து எஸ் பி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி இவர் பயன்படுத்திய தொலைபேசி 6 மாதத்திற்கு முன் பழுதடைந்தது. இதை அடுத்து துறையூர் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய இளங்கோவன் என்பவரது கடையில் பழுதை சரிசெய்ய கொடுத்திருக்கிறார். சில நாள் கழித்து போனை திருப்பி வாங்க செல்லும் போது போனை மற்றொரு நபருக்கு விற்று விட்டதாக கூறி கடையின் உரிமையாளர் இளங்கோவன் வேறு ஒரு போனை ரேவதி தந்திருக்கிறார். இந்த நிலையில் ரேவதியும் அந்த ஃபோனை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார், ஆனால் அப்படி பெற்று வந்த போனும் அடிக்கடி பழுதடைந்து வந்தது, இதையடுத்து கடையின் உரிமையாளர் இளங்கோவனை மீண்டும் தொடர்புகொண்ட ரேவதிக்கு சரியான பதில் ஏதும் தராமல் அலைக்கழித்து வந்திருக்கிறார்.

இதையடுத்து ரேவதி துறையூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார், புகாரை விசாரித்து எஸ்.ஐ இதற்கெல்லாம் நாங்கள் என்ன செய்வது என்று கூறி புகாரை வாங்க மறுத்து இருக்கிறார். இதையடுத்து ரேவதி அவசர உதவி எண் 100யை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியிருக்கிறார்.மேலும் திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தியின் தொலைபேசி எண்ணையும் பெற்றிருக்கிறார்.

Srirangam MLA palaniyandi birthday

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

பிறகு மாவட்ட எஸ்பி மூர்த்தியை தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறி யிருக்கிறார். எஸ்பி நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டு உங்கள் வீடு தேடி வந்து புகார்களை பெறுவார்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி சிறுது நேரத்தில் எஸ்.ஐ மற்றும் மற்றொரு காவலர் இருவரும் ரேவதியின் இல்லத்திற்குச் சென்று புகாரைப் பெற்றிருக்கின்றனர். மேலும் கடையின் உரிமையாளரை அழைத்து ரேவதியின் தொலைபேசிக்கு உரிய மூன்றாயிரம் ரூபாய் பணத்தையும் பெற்று தந்துவுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்திருக்கிறது என்றால் பணியில் உள்ள காவலர்கள் அதற்குரிய சிஎஸ்ஆர் (மனு ரசீது) பதிவு செய்து தர வேண்டும், பிறகு விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும், ஆனால் காவல் நிலையங்களில் சிஎஸ்ஆர் பெறுவதே மிகவும் சிரமமாக இருக்கிறது என்று எளிய மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.