இரண்டாக உடைந்த திருச்சி மாநகர திமுக செயலாளர் பதவி ! மல்லுகட்டிய அமைச்சர்கள்!
இரண்டாக உடைந்த திருச்சி மாநகர திமுக செயலாளர் பதவி ! மல்லுகட்டிய அமைச்சர்கள்!
திருச்சி திமுக கட்சியில் திருச்சி மாநகர செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான நிஜ யுத்தமே நடந்துள்ளது. திருச்சிதிமுக என்றாலே கே.என். நேரு தான் என்று இருந்த அரசியல், மகேஸ் பொய்யாமொழி வருகைக்கு பிறகு கட்சியினர் இடையே இரண்டு அணிகளாக பிரிய தொடங்கின.
அன்பில் மகேஸ் மாவட்ட செயலாளர், அமைச்சர் என்று அடுத்தடுத்த கட்சி பதவிகளில் உயர்வு பெற்ற பொழுதிலும் அவருடைய ஆதரவாளர்கள் யாருக்கும் அவர்கள் நினைத்த பதவியை வாங்கி கொடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்.இருந்த பொழுதிலும் சிலருக்கு விகிதாசார அடிப்படையில் பதவிகள் கிடைத்தன.
அதே நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு முதன்மை செயலாளர், அமைச்சர் என்று தலைமைக்கு நெருக்கமான இடத்திற்கு சென்றாலும் தன்னுடைய நீண்ட கால அரசியல் அனுபவத்தை வைத்து மாவட்ட அரசியலையும் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை தக்கவைத்து கொண்டே வருகிறார்.
சமீப காலமாக கே.என்.நேரு மாநில அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். மாவட்ட அரசியலை மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மா.செ. வைரமணி , அமைச்சரின் மகன் கே.என்.அருண் ஆகியோர் மட்டுமே கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் மகேஸ் தரப்பினர் மேயர் பதவியை மதிவாணனுக்காக வாங்கி கொடுக்க முட்டி மோதி, கடைசியில் அரசியலில் அனுபவமே இல்லாத திவ்யா என்பவருக்கு துணைமேயர் பதவி வாங்கி கொடுத்தார், கோட்ட தலைவர் பதவி 2 பேருக்கு கிடைத்தது. தற்போது மாநகர செயலாளர் பதவியை குறிவைத்து காய் நகரத்தினார் மா.செ.அன்பில் மகேஸ்
திருச்சிமாநகர திமுகவை பொறுத்தவரையில் 65 வார்டுகளில் 36 வார்டுகள் மகேஸ் தரப்பிற்கும், 29 வார்டுகள் வைரமணி தரப்பிற்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகர செயலாளர் பதவியை தற்போது வரை மேயர் அன்பழகன் வசம் இருக்கிறது.
தற்போது அந்தப் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
திமுக15வது உட்கட்சி தேர்தலுக்காக மாநகர பகுதியை சீரமைத்து கொள்ள கட்சி தலைமை அனுமதி வழங்கியது. இந்த நிலையில் மத்திய மண்ட மா.செ. வைரமணி ஏற்கனவே இருந்த 5 பகுதி செயலாளர்களை மாற்றாமல் அப்படியே வைத்து இருந்தார்.
ஆனால் தெற்கு மாவட்ட மா.செ. மகேஸ் பொய்யாமொழி 5 பகுதி செயலாளர் என்று இருந்ததை மார்கெட் என்கிற புதிய பகுதியை உயர்த்தி 6ஆக மாற்றி திருத்தம் செய்து முரசொலியில் அறிவிப்பாக வெளியிட்டார்.
இதை அறிந்து அதிர்ச்சியான கே.என்.நேரு வைரமணியை அழைத்து வறுத்தெடுத்தார். நீங்கள் எல்லாம் என்ன அரசியல் பண்றீங்க! இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா மாட்டீங்களா? என்று கடுகடுக்க…,
அண்ணே !.. நீங்க எதுவும் சொல்லன்னே… அதனால பேசமா விட்டுட்டுடோம் என்று கையை பிசைந்திருக்கிறார்.
என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சு சொல்லமாட்டீங்களா ? அதையும் நான் தான் செய்யனுமா ? என்று சலித்துக்கொண்டு மத்திய மண்டலத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியை உடைத்து திருவானைக்காவல் என்று பகுதி என்று ஒன்றை உருவாக்கி 6 பகுதியாக உயர்த்தி முரசொலில் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு மாவட்டத்திற்கும் தலா 6 பகுதி செயலாளர்களாக இருக்கும் படி மாற்றினார்.
இந்த நிலையில் ஜீலை 22 ம் தேதி 24ம் தேதி என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தீடிர் என திருவெறும்பூர் என்று புதிய பகுதியை உருவாக்கி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு 7 பகுதியா மாற்றி அறிவிப்பு வெளிட்டார். இந்த அறிவிப்பு முரசொலில் வெளியானது.
இதனால் தற்போது தெற்கு மாவட்டத்தில் 7 பகுதி செயலாளர்களும், மத்திய மாவட்டத்தில் 6 பகுதி செயலாளர்களும் இருப்பதால் இப்போது இருக்கிற நிலையில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரே மாநகர செயலாளராக தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்தது.
இது கே.என்.நேரு தரப்பினர் இடையே பெரிய அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட திருச்சி தெற்கு மாவட்டம் பகுதி செயலாளர்கள்
மலைக்கோட்டை பகுதிக்கு ஆர். மோகன், மார்க்கெட் பகுதிக்கு ஏஎம்ஜி விஜயகுமார் ( இந்த தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து வந்தவர் ) , பாலக்கரை பகுதிக்கு டி பி எஸ் எஸ் ராஜ முகமது, அரியமங்கலம் பகுதிக்கு நீலமேகம், பொன்மலை பகுதிக்கு இ எம் தர்மராஜ், திருவெறும்பூர் காட்டூர் பகுதிக்கு எஸ் சிவகுமார் கே.என்.சேகரன் மகன், கலைஞர் நகர் பகுதிக்கு ஜி மணிவேல்,
புதிதாக நியமிக்கப்பட்ட திருச்சி மத்திய மாவட்டம் பகுதி செயலாளர்கள்
ஸ்ரீரங்கம் பகுதிக்கு ராம்குமார், திருவானைக்காவல் பகுதிக்கு என் கனகராஜ், உறையூர் பகுதிக்கு இளங்கோ, தில்லைநகர் பகுதிக்கு நாகராஜன், அண்ணா நகர் பகுதிக்கு கமல் முஸ்தபா, பொன் நகர் பகுதிக்கு மோகன்தாஸ், காஜாமலை பகுதிக்கு காஜாமலை விஜய்.
தற்போது கே.என்.நேரு தரப்பில் ஆரம்ப முதலே திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மாநகர செயலாளராகமுன்னிறுத்தப்பட்டு வருகிறார். தற்போது அன்பழகன் மேயர் பதவியில் இருப்பதால் வேறுயாரையும் நிறுத்தலாமா ? என்கிற யோசனையில் இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அதே நேரத்தில் அன்பழன் தரப்பிலோ மாநகர செயலாளர் பதவியை விட்டு கொடுக்க மனமில்லை. ஆனால் மாவட்ட துணை செயலாளர் பதவியில் இருந்து முத்து செல்வம், துணைமேயர் பதவிக்கு போட்டு போட்டு தோற்று போன நிலையில் முத்து செல்வம் தற்போது மாநகர செயலாளர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் மேயர் அன்பழகனை இறுதியில் ஜெயித்தார்.
பகுதிசெயலாளர்கள் பதவிக்கு சில புதுமுகங்களை தில்லை நகர் பகுதிக்கு எஸ் நாகராஜன் அண்ணாா நகர் பகுதிக்கு கமல் முஸ்தபா திருவானைக்காவல் பகுதிக்கு என் .கனகராஜ் கொண்டு வந்து கே.என்.நேரு இறங்கி இருக்கிறார்.
தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் தரப்பிலோ ஏற்கனவே மேயர்பதவியை மதிவாணன் மற்றும் கே.என்.சேகரனுக்காக மோதி கடைசியில் மதிவாணணுக்கு கோட்டத்தலைவர் தான் கிடைத்தது. கே.என்.சேகரன் போட்டியிடமால் விலகி தன் மகனை கவுன்சிலராக ஆக்கினார். அதே நேரத்தில் மாநகர செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று அன்பில் மகேஸ்க்கு நெருக்கடி கொடுத்தார். கடைசியில் கே என் சேரன் பாண்டியன் சிவகுமாருக்கு பகுதி செயலாளர் பதவி கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார்.
அமைச்சர் மகேஸ் தரப்பினரோ…. மேயர் பதவியை தான் விட்டுட்டோம்.. ஆனா மாநகர செயலாளர் பதவியை விட்டு தரமாட்டேன். எப்படியும் ஜெயித்திடலாம் என்று கட்சியினருக்கு தெம்பூட்டினார்.
அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலோ… என்னவேனா திட்டம் போடட்டும் மாநகர செயலாளர் நமக்கு தான் என்று மேயர் அன்பழகன் உள்ளிட்ட கட்சியினருக்கு தெம்பு கொடுத்து வருகிறார்.
கடுமையான மோதலில் இருக்கும் கடைசியாக நடந்த பஞ்சாயத்தில் இந்த மாநகர செயலாளர் பதவிக்கு தொகுதிகளை பிரித்து கொள்ளலாம் என்று மகேஸ் தரப்பினர். லால்குடியை எங்களுக்கு கொடுத்துவிட்டு நீங்கள் மணப்பாறையை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
நேரு தரப்பிலோ… மணப்பாறை வேண்டாம் திருச்சி கிழக்கு தொகுதியை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று செக் வைக்க.. இது சரிபட்டு வராது என்று திருச்சி தான் ஏற்கனவே இரண்டாகி விட்டது. இனி இணைப்புக்கு வழி என்று திருச்சி மாநகர செயலாளர் பதவியை உடைத்து தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு தெற்கு மாவட்டம், மத்தியமாவட்ட மாநகர செயலாளர் என்று பிரித்து இருக்கிறார்கள்.
மத்திய மாவட்டத்திற்கு அன்பழகன் தெற்கு மாவட்டத்திற்கு மதிவாணனும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
கட்சியின் சீனியர் ஒருவர் நம்மிடம் பேசியில் பேராசிரியர் அன்பழகன் இருந்திருந்தால் இந்த பதவியை உடைத்து இருக்க மாட்டார். தமிழ்நாடு முழுவதும் மாநகரப் பகுதி பிரிக்கப்படாமல் இருக்கும் பொழுது திருச்சியை மட்டும் இப்படி பிரித்து இருப்பது எங்களைப் போன்ற சீனர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பொதுச் செயலாளர் துரைமுருகன் தமிழகம் முழுவதும் திமுகவின் கோஷ்டியை அதிகரிக்கும் வண்ணம் கட்சியை கூறுக பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ற குற்றச்சாட்டை வைத்தனர்.