திருச்சி மாவட்ட திமுகவின் புதிய மாவட்ட செயலாளர்கள் ! அதிரடி மாற்றமா ?
திருச்சி மாவட்ட திமுகவின் புதிய மாவட்ட செயலாளர்கள் இவர்களா ?
மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் அறிக்கை கேட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுடன் மறைமுக கூட்டணி, ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான உள்ளடி வேலை பார்த்தவர்கள் என்று பல்வேறு படிநிலைகளில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை சமீபத்தில் முதல்வர் கையில் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் சீனியர் காவல்துறை அதிகாரிகள், கட்சிக்குள் சில மாற்றங்களை அவர் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து கட்சி ரீதியாகப் பெரிய மாற்றங்கள் எதையும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்யவில்லை.
தற்போது மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று இறுதி பட்டியலானது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சூழலில் மாவட்ட செயலாளர்களை பொறுத்த வரை பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்பட்டது.
ஆனால் தற்போது திமுகவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல் தான் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் முதல்வர் ஸ்டாலின் முறையாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றலாம் என்ற தகவலால்தான் இந்த அதிர்ச்சி.
இதனால் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகள் பலர் அதிர்ச்சி கலந்த பயத்துடனேயே பல மாவட்டங்களில் வலம் வருகின்றனர். முதலில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்காது என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
வருகின்ற மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால் மாவட்ட செயலாளர்களை கண்டிப்பாக மாற்றிய தீர வேண்டும் என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் வேறு வழியின்றி அதனை செயல்படுத்த முதல்வர் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
திருச்சியை பொறுத்த வரையில்.. கே.என்.நேரு – என்று தனி ஒருவரின் கட்டுபாட்டில் இருந்த திருச்சி திமுக மகேஸ் பொய்யாமொழி வருகைக்கு பிறகு இரண்டு கோஷ்டியாக பிரிந்தது.
தற்போது திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் திருச்சி மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டம் என இரண்டும் மாவட்டமும் கே.என்.நேருவின் கட்டுபாட்டிலும், தெற்கு மாவட்டம் அன்பில் மகேஸ் கட்டுபாட்டிலும் உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு அன்பில் மகேஸ், வடக்கு மாவட்டத்திற்கு தியாகராஜன், மத்திய மாவட்டத்திற்கு வைரமணி ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைமை திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே பிரித்து இருந்து மாவட்டங்கள் சிலவற்றை மறுசீரமைப்பு செய்கிறார்கள்…
அந்த வரிசையில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி தொகுதிகளை இணைத்து அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறவினர் வாளாடி கார்த்தி நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இவர் திமுக தலைவர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்து வருகிறார். தலைவர் குடும்பத்தினர் வெளியூர், வெளிநாட்டிற்கு சென்றாலும் எப்போது உடன் இருப்பவர்.
அதே போன்று மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய பகுதிகளை இணைத்து தனலெட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் சீனிவாசனின் மகனும், மண்ணச்சநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கதிரவனை மாவட்ட செயலாளராக நியமிக்க வாய்ப்பு என்கிறார்கள்.
திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகியோ தொகுதிகளை இணைத்து அதற்கு சாந்தாபுரம் ஆனந்த் நியமிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனந்த ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெ. எதிர்த்து ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். .இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்
இந்த 3 பேரும் புதியவர்கள் என்பதும் அடுத்த தலைமுறையினர் என்பதும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள்…
பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர் வர வாய்ப்பு இருக்கிறது என்கிற பேச்சு பரவலாக இருந்தது. அந்த இனத்தை சேர்ந்தவர்களும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சமீபகாலமாக கட்சியின் உள் பொறுப்புகளில் பதவிகளில் கொடுக்க வில்லை பக்கம் மட்டும் நம்மை புறக்கணிக்கிறார்கள்… முணுமுணுப்பு கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது…
இன்று நாம் சொல்கிற புதிய மாவட்ட செயலாளர்கள் தற்போது நிலவரப்படி முன்னணியில் இருக்கிறார்கள்… இந்த பட்டியலில் மாற்றத்திற்கு உட்பட்டது.