கதிகலக்கும் கல்லூரி ! போதை + அடியாட்கள் படையுடன் மாணவிகள் அலறும்  மாணவர்கள்!

0

கதிகலக்கும் கல்லூரி ! போதை + அடியாட்கள் படையுடன் மாணவிகள் அலறும்  மாணவர்கள்!

 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோலிவுட் ஏரியாவில் இருக்கிறது அந்த புகழ்பெற்ற கல்விக்குழுமத்தின் கல்லூரி.

இந்தக் கல்விக்குழுமத்திற்குச் சொந்தமாக மருத்துவக்கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், நடிப்புப் பயிற்சிக் கல்லூரி, டிராவல்ஸ் நிறுவனம் என பல்வேறு வியாபார நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குழுமத்தின் தலைவரோ, மாவட்ட லெவல் அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இருக்கிறார். இவருக்குச் சொந்தமாக பெரிய மருத்துவமனையும் உள்ளது.

 

பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான இவருக்குச் சொந்தமான கோலிவுட் ஏரியா கல்லூரியில், தமிழக மாணவ—மாணவிகளைவிட வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவ—மாணவிகள் தான் அதிகம் பயின்று வருகிறார்கள்.

இவர்களிடம் பணப்புழக்கமும் அதிகம். பணப்புழக்கம் அதிகம் இருந்தால் கெட்ட புழக்கமும் அதிகமாகத் தானே இருக்கும். இதனால் கல்லூரியை ஒட்டியிருக்கும் பார்க்கில் கஞ்சா மற்றும் உயர்தர போதை வஸ்துகளை சப்ளை பண்ணும் கும்பலின் நடமாட்டமும் அதிகம் இருக்கும்.

 

காலேஜ் டீ பிரேக் மற்றும் லஞ்ச் பிரேக்கில் இந்த பார்க்கை ஒட்டிய பகுதிக்கு வரும் மாணவ—மாணவிகள் கூட்டம் சர்வசாதாரணமாக தம் அடிக்கிறார்கள். குறிப்பாக மாணவிகள் ‘லைட்ஸ்’ சிகரெட்டை ஹெவியாக ஊதித்தள்ளிவிட்டு ஹாயாக காலேஜுக்குள் போய்விடுகிறார்கள். ‘ஊதும்’ மாணவிகள் எல்லோருக்கும் துணையாக மாணவர்கள் டீம் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு குரூப் மாணவிகளுக்கென்றே மாணவர்கள் டீம் ‘சுறுசுறு’ப்பாக செயல்படும்.

 

மாலையில் கல்லூரி முடிந்ததும் பெப்சி, கோக் பாட்டில்களில் மிக்சிங் செய்யப்பட்ட சரக்குகளை ‘சிப்’ பண்ணிவிட்டு, லைட்டாக மாணவர்களை சூடேற்றிவிட்டு சிட்டாக பறந்துவிடுகிறார்கள் மாணவிகள்.  இதுல ஒரு விசேச சங்கதி என்னவென்றால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள் டீமை ‘சேஞ்ச்’ பண்ணிவிடுகிறது மாணவிகள் டீம்.

 

மாணவிகளின் இந்த ஏடாகூட சங்கதிகள் எதுவும் தெரியாத மாணவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கதறுவார்கள். அப்படித்தான் மிக சமீபத்தில் ஒரு பிரச்சனை வெடித்து அந்த ஏரியாவே கதிகலங்கியிருக்கிறது. செம ஸ்டைலாகவும் லுக்காகவும் ‘வெயிட்’டும் ‘ஹைட்’டும் கொண்ட  தன்னுடன் படிக்கும் ஒரு மாணவிக்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் செலவு செய்து சின்ன அளவு ‘சந்தோஷ’ப்பட்டிருக்கிறார் அந்த மாணவர்.

 

தனது வழக்கமான ‘டிரெண்ட்’ படி, பணப்புழக்கம் அதிகம் இருக்கும் இன்னொரு மாணவரை ‘பிராக்கெட்’ போட்டு அவருடன் ஜாலியாக வலம் வந்துள்ளார் அந்த மாணவி. இதைப் பார்த்து டென்ஷனான ஓல்டு மாணவர், அந்த மாணவியிடம் ’நியாயம்’(?!) கேட்டுள்ளார். அந்த மாணவியோ மறுநாள் தனது வெளிவட்டார தொடர்பில் இருக்கும் அடியாட்கள் படையுடன் வந்து, பணத்தை இழந்த மாணவரை ஓப்பனாக மிரட்டி ஓடவைத்துள்ளார்.

 

இந்த மிரட்டல் விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரியும், கல்லூரிக்கு மிக அருகிலேயே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தெரியும். கல்லூரித்தரப்பிலிருந்து மாதம் தோறும் லம்பாக ஒரு ’அமவுண்ட்’ சென்றுவிடுவதால்  கஞ்சா மற்றும் போதை வஸ்துகளைக் கண்டு கொள்ளாத போலீஸ் ஸ்டேஷனும், இந்த மிரட்டல் விவகாரத்தையும் கண்டு கொள்ளவில்லை.

 

இந்தக் கல்லூரியில் மட்டுமல்ல, இக்குழுமத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் இது போன்ற வில்லங்க சங்கதிகள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.

 

என்றைக்கு பூதாகரமாக வெடித்து பூகம்பம் கிளம்பப் போகிறதோ ?

 

–மதுரை மாறன்

 

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.