சாகுபடி நிலங்களுக்கு பாசன நீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்திற்கு அருகில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடினாலும் விவசாயிகள் மின்சார மோட்டாரையும், டீசல் மோட்டாரையும் நம்பி தான் விவசாயம் செய்ய வேண்டி உள்ளது.
இது சம்பந்தமாக பெருகமணி திருப்பராய்த்துறை அணலை எலமனூர் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரி உயர்திரு முருகானந்தம் அவர்களை முக்கொம்பு அலுவலகத்தில் சந்தித்து கீழ்வரும் கோரிக்கைகளை வைத்தனர்.
கடந்த 19 வருடத்தில் ஒரு ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உயிர் அதிகாரி விவசாயிகளை நேரடியாக சந்திப்பது இதுதான் முதல் முறை என்ன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
புது ஐயன் பாசன வாய்க்காலில் தூர்வாரி தண்ணீர் தடையின்றி வருவதற்கு வசதி செய்து தர வேண்டும். பெட்டவாய்த்தலை முதல் எலமனூர் கடைமடை வரை அக்கிரமிப்புகளை அகற்றி இரண்டு புறமும் கரைகள் அமைத்து தர வேண்டும்.
கொடிங்கால் வாய்க்காலில் இரண்டு புறமும் கரைகள் அமைத்து தர, உடைந்து போன கீழ்போக்கு குழாயை சரி செய்து தர, கொடிங்கால் வாய்க்காலில் உள்ள மதகுகளை சரி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
அணலை உய்ய கொண்டான் வாய்க்கால் தீச்சபுரம் குழுமியில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்தனர்.