திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை – உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி..
உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி.. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டு தோறும் உலக கண் பார்வை தினத்தை பற்றி மக்களுக்கு கண் நலம் பற்றிய செய்திகளை வழங்குகின்றன.
ஒரு நோயை குணப்படுத்துவதை காட்டிலும் அதனை வராமல் தடுப்பது, அது நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து குணப்படுத்துவது போன்ற சில முக்கிய செய்திகளை அறிவுறுத்தும் வகையில் உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன், திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்ரீரங்கம், திருச்சி சிட்டி, பட்டர்ஃபிளை, நெக்ஸ்ட் ஜென், திருச்சி ஐ டொனேஷன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா , ரோட்டரி பிரமுகர்கள் சீனிவாசன், செந்தில் ,மின்னல் சரவணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் ,ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு, ரோட்டரி சங்கம் தலைவர்கள், நிர்வாகிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 1000 பேர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இந்நிகழ்வில் பங்கேற்றனர்.