திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் (12.10.2024) நள்ளிரவு 12.00 மணி முதல் மூடல் – போக்குவரத்து மாற்றம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் (12.10.2024) நள்ளிரவு 12.00 மணி முதல் மூடல் – போக்குவரத்து மாற்றம் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் சந்திப்பு சாலை மேம்பாலம் இரண்டாம் கட்டப்பணி மாற்று வழித்தடம்.

கனரக வாகனம் செல்லும் வழித்தடங்கள் 1) சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், வழித்தடங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திண்டுக்கல் மற்றும் அதன் மார்க்கமாக செல்லும்போது மதுரை புறவழிச்சாலை வழியாக சென்று மணிகண்டம் வண்ணாங்கோவில் வழியாக செல்ல வேண்டும்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திண்டுக்கலில் இருந்து சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் வண்ணாங்கோவில் மணிகண்டம் வழியாக மதுரை புறவழிசாலை சென்றடைந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.

பேருந்துகள் செல்லும் வழித்தடங்கள்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ili) சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், வழித்தடங்களில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் (குறிப்பு மாநகர பேருந்து தவிர) மாற்றுப் பாதையாக மன்னார்புரம். TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை அனைத்து மகளிர் காவல் நிலையம், வெஸ்ட்ரி ரவுண்டானா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரியமிளகுபாறை வழியாக சென்று வ.உ.சி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

iv) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, தஞ்சாவூர், சேலம் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் வழக்கமாக செல்லும் குரு ஹோட்டல் ஜங்ஷன், முத்திரையர் சிலை, தபால் நிலையம் சிக்னல், TVS டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

v) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வ.உ.சி சாலை, பெரியமிளகுபாறை கோரிமேடு வழியாக புதிய மேம்பாலம் கீழ் சென்று சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

VI) திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரக்கூடிய பேருந்துகள் புதிய பாலம் ஏறாமல் கோரிமேடு, பெரியமிளகுபாறை வஉசி ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

vii) மதுரை மாரக்கத்திலிருந்து வரக்கூடிய பேருந்துகள் மன்னார்புரம், அரிஸ்டோ மேம்பாலம், வழியாக பாலத்திலுள்ள ரவுண்டான வந்து ஜங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

vill) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள், பேருந்து நிலையம் பின்புறமாக வெளியே வந்து வபசாலை, காமராஜ் சிலை ரவுண்டானா, அரிஸ்டோ மேம்பாலம் மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும்.

ix) எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டியிலிருந்து வரும் இலகுரக வாகளங்கள், இருசக்கர வாகனங்கள் ஒருவழிப்பாதையாக புதிய மேம்பாலம் வழியாக பாலத்திலுள்ள ரவுண்டான வந்து ஐங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

x) திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷனிலிருந்து மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் சொல்லும் இலகுரக வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம் அருகில் காமராஜர் சிலை ரவுண்டான வழியாக புதிய மேம்பாலம் ஏறி ஒருவழிப்பாதையாக செல்லவேண்டும் எடமலைப்பட்டிபுதூர் செல்வோர் மன்னார்புரம் சென்று வரவேண்டும் இந்த போக்குவரத்து மாற்றம் எதிர்வரும் (12.10.2024) சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் என்று திருச்சிராப்பள்ளி ஆட்சித்தலைவர் மாபிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.