அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

BTG Universal நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

BTG Universal நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்புத் துறையில் கோலோச்சி வரும் பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார்.   வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளவில் கோலோச்சும் பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ்த் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டாக்டர் எம்.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.

HARINI JEWELLERS TRICHY

இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

முன்னதாக இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, ‘டிமான்ட்டி காலனி 2’ இரண்டாவது தயாரிப்பு  ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ இந்த மாதம் ரிலீஸாகிறது.. மூன்றாவது தயாரிப்பு , ‘ரெட்டதல’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது.

புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படங்களின்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.