‘கங்குவா’ க்ளைமாக்ஸில் கார்த்தி!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

டைரக்டர் பாலாவுடனான மனக்கசப்பினால் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகினார் சூர்யா. 25 நாட்கள் ஷூட்டிங் நடந்து, அதற்காக சில கோடிகள் போனாலும் பரவாயில்லை, இனிமேலும் பாலாவுடன் பயணித்தால், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் பலத்த சேதாரமாகும் என்பதால் தான் சூர்யா இந்த முடிவை மனவருத்தத்துடன் எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அதன் பின் வெற்றிமாறன் டைரக்‌ஷனில் கலைப்புலி தாணு தயாரிப்பில், ‘வாடிவாசல்’ படம் ஆரம்பவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனது  44—ஆவது படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார் சூர்யா. சுப்புராஜின் செம சுறுசுறுப்பு, சூர்யாவை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதற்கிடையே சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் ‘கங்குவா’. மும்பையைச் சேர்ந்த ஜெயந்திலால் கட்டாவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார் ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா. இந்த அக்டோபர் 10—ஆம் தேதி ‘கங்குவா’வை ரிலீஸ் பண்ணப் போவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்தார் ஞானவேல்ராஜா. ஆனால் ‘வேட்டையன்’ ரிலீசை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என நினைத்த சூர்யா நவம்பர் 14—ஆம் தேதிக்கு தள்ளிவைக்கச் சொன்னார். இதற்கு ஞானவேல்ராஜாவும் ஒத்துக் கொண்டதால், தீபாவளி கழித்து ‘கங்குவா’ புரமோஷனை ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளாராம் சூர்யா.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கங்குவா
கங்குவா

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதில் இண்ட்ரஸ்டிங்கான ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு. அதாவது தனக்காக ‘மெய்யழகன்’ படத்தைத் தயாரித்த தனது அண்ணன் சூர்யாவுக்காக ‘கங்குவா’ க்ளைமாக்ஸில் மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்காராம் தம்பி கார்த்தி. இதற்காக சென்னை புறநகரில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு க்ளைமாக்ஸை ஷூட் பண்ணியுள்ளாராம் டைரக்டர் சிவா.

 

–மதுரை மாறன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.