திருச்சி மக்களவை தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு 2026-ல் வெற்றி வாய்ப்பு?
திருச்சி மக்களவைக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் கள நிலவரம் பற்றி தகவல்கள்.
- ஸ்ரீரங்கம்
- திருச்சிராப்பள்ளி மேற்கு
- திருச்சிராப்பள்ளி கிழக்கு
- திருவெறும்பூர்
- கந்தர்வக்கோட்டை (தனி)
- புதுக்கோட்டை

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக கட்சியைச் சார்ந்த துரைவைகோ 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். அதிமுகவைச் சார்ந்த ப.கருப்பையா தோல்வியடைந்துள்ளார்.

வாக்குப் பதிவு விவரங்கள்
மதிமுக துரை வைகோ 5,42,213
அதிமுக ப. கருப்பையா 2,29,119
நாதக து. ராஜேஷ் 1,07,458
அமமுக ப. செந்தில்நாதன் 1,00,747
சட்டமன்ற வாரியாக 2021 சட்டமன்றத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்
ஸ்ரீரங்கம்
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த மொ.பழனியாண்டி வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தோல்வியடைந்துள்ளார்.

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 1,13,904 மதிமுக – 99,160
அதிமுக – 93,989 அதிமுக – 55,859
அமமுக – 3,487 அமமுக – 26,024
மநீமை – 1,607 நாதக – 24,853
நாதக – 17,911

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 19,915 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 81,883 திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 17,277 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
திருச்சி மேற்கு
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த கே.என்.நேரு வெற்றிப் பெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் வி.பத்மநாபன். கே.என்.நேரு 2 முறையாக வெற்றிப் பெற்றுள்ளார்.

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 1,18,133 மதிமுக – 84,718
அதிமுக – 33,024 அதிமுக – 26,282
அமமுக – ///////// அமமுக – 19,700
மநீமை – 10,546 நாதக – 16,060
நாதக – 15,725
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 85,109 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 45,982. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 38,736 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
திருச்சி கிழக்கு
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த இனிகோ.எஸ்.இருதயராஜ் வெற்றிப் பெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 94,302 மதிமுக – 90,780
அதிமுக – 40,505 அதிமுக – 27,066
அமமுக – 9,089 அமமுக – 17,933
மநீமை – 11,396 நாதக – 13,288
நாதக – 14,312
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 53,797 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 44,999. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 45,781 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
திருவெறும்பூர்
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 முறையாக வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் முன்னாள் மக்களவை உறுப்பினர் ப.குமார்

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 1,05,424 மதிமுக – 1,02,677
அதிமுக – 55,727 அதிமுக – 32,849
அமமுக – 2,293 அமமுக – 13,085
மநீமை – 14,678 நாதக – 15,719
நாதக – 15,719
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 49,697 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 45,934. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 56,743 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
கந்தர்வகோட்டை (தனி)
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சி சார்ந்த

வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் செ.ஜெயபாரதி
2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 69,710 மதிமுக – 72,238
அதிமுக – 56,989 அதிமுக – 39,537
அமமுக – 12,840 அமமுக – 9,606
மநீமை – 848 நாதக – 15,433
நாதக – 12,661

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 12,721 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 49,143. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 23,095 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுகவைச் சார்ந்த வை.முத்துராஜா வெற்றிப் பெற்றுள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் கார்த்திக் தொண்டைமான்
2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 85,802 மதிமுக – 79,304
அதிமுக – 72,801 அதிமுக – 45,816
அமமுக – 1,873 அமமுக – 13,213
மநீமை – 3,948 நாதக – 16,764
நாதக – 11,503

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியைவிட 13,001 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 59,029. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளைவிட 20,275 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
— ஆதவன்.