நள்ளிரவில் 14 ரவுடிகள் வீட்டில் புகுந்து பத்திரங்கள் மற்றும் ஆயுதங்களை அள்ளிய ஆப்ரேசன் அகழி ! எந்த ரவுடி எந்தக் கட்சியில் ? கலக்கத்தில் ரவுடிகள் !

2

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆப்ரேசன் அகழி ! ஆரம்பமானது வருண் வேட்டை ! எந்த ரவுடி எந்தக் கட்சியில் ? கலக்கத்தில் ரவுடிகள் !
”பெயரைக் கேட்டாலே குலை நடுங்கும்” அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த ரவுடிகளையெல்லாம் அலறவிட்டிருக்கிறார், திருச்சி எஸ்.பி.வருண்குமார். அபாயகரமான ரவுடிகள் 14 பேரின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியும், அவற்றுள் சிலரை கைது செய்தும் அதிரடி காட்டியிருக்கிறார், அவர்.

சமீபத்தில் நில அபகரிப்பு புகாரில் கட்டப்பஞ்சாயத்து ரவுடி கொட்டப்பட்டு செந்திலை திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்திருந்தார்கள். அந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, கட்டப்பஞ்சாயத்து மிரட்டி பணம் பறிப்பது நிலத்தை அபகரிப்பது போன்ற அடாவடிகளில் கொட்டப்பட்டு செந்திலும், சாத்தனூர் அண்ணாமலையும் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுக்கு எதிராக புகார் கொடுக்கவே பலரும் அஞ்சிய நிலையில்தான் இந்த அதிரடியை நடத்தியிருந்தார் எஸ்.பி.வருண்குமார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

சாத்தனூர் அண்ணாமலை - கொட்டப்பட்டு செந்தில்
சாத்தனூர் அண்ணாமலை – கொட்டப்பட்டு செந்தில்

கோட்டையைக் காக்கும் அகழியைப்போல, இதுபோன்ற ரவுடிகள் – கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், “ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் புதிய தனிச்சிறப்பான நடவடிக்கையை தொடங்கியிருப்பதாகவும் அப்போது அறிவித்திருந்தார் எஸ்.பி. வருண்குமார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதன் தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சிராப்பள்ளி மாநகர ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் “ஆப்ரேசன் அகழி” என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

கொட்டப்பட்டு ஜெய்
கொட்டப்பட்டு ஜெய்

இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவல் மற்றும் சந்தேகப்படும் நபர்களை அடையாளம் கண்ட போலீசார், முதற்கட்டமாக, 1. பிரபு என்ற பப்லு, 2) ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், 3) மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ், 4) டேவிட் சகாயராஜ், 5) பாலு என்ற பாலமுத்து, 6) பிரதாப் என்ற சிங்கம் பிரதாப், 7) ராஜகுமார், 8) கருப்பையா, 9) பாதுஷா என்ற பல்பு பாட்ஷா, 10) கரிகாலன், 11) கோபாலகிருஷ்ணன் என்ற தாடி கோபால், 12) சந்திரமௌலி, 13) குருமூர்த்தி மற்றும் 14) டி.டி.கிருஷ்ணன் ஆகிய ரவுடிகளின் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களுக்கு போலீசார் அதிரடி ரெய்டை நடத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு எஸ்.ஐ. மூன்று காவல் ஆளிநர்கள் களமிறக்கப்பட்டனர்.

கடந்த செப்-19 அன்று மாலை தொடங்கி இரவு வரை நீடித்த இந்த அதிரடி ரெய்டில், மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்கள்; 68 வங்கி கணக்கு புத்தகங்கள்; 75 புரோநோட்டுகள்; 82 நிரப்பப்படாத காசோலைகள்; 18 செல்போன்கள்; 84 சிம்கார்டுகள் மற்றும் பிற ஆவணங்களையும் வாரிச்சுருட்டி வந்திருக்கிறார்கள்.

பட்டரை சுரேஷ்
பட்டரை சுரேஷ்

திருச்சியில் மிகவும் பிரபலமான ரவுடிகளில் ஒருவராக அறியப்படுபவரும் இந்திய ஜனநாயக் கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருபவருமான மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து மட்டும் 66 அசல் பத்திரங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். இவை அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக திருச்சி மாவட்ட போலீசாரின் செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

சீமானும் சந்திரமௌலி
சீமானும் சந்திரமௌலி

இந்த தேடுதல் வேட்டை தொடங்குவதற்கு முன்பாகவே, எப்படியோ தகவல் கிடைத்து எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த சந்திரமௌலி தப்பியோடியிருக்கிறார். இருப்பினும் அவரது நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
“ஆப்ரேசன் அகழி” அதிரடி ரெய்டை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 825 போலீசாரை களமிறங்கி வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த வாகன சோதனையின்போது, செப்-20 அன்று வாத்தலை போலீஸ் லிமிட்டில் முக்கொம்பு நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில் மூவரோடு பயணித்த TN 07 AM 4541 Skoda Octavia என்ற கார் போலீசாரை கண்டதும் அதிவேகம் எடுத்ததோடு, அருகிலிருந்து சுவரில் மோதிவிட்டு அதிலிருந்த இரண்டு நபர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சுவற்றில் மோதிநின்ற காரை போலீசார் சோதனையிட, அதிலிருந்து அருவாள்-1, இரும்பு வாள்-2, இரும்பு ராடு 1 போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடியவர்களை விரட்டியிருக்கின்றனர்.

உடன் வந்த இருவர் தப்பியோடிய நிலையில், காரில் திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்ற மௌலி சிக்கியிருக்கிறான். போலீசாரின் விசாரணையில் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக சந்திரமௌலியை கைது செய்ய முயற்சித்தபோது, போலீசாரை அசிங்கமாக திட்டியிருக்கிறான் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறான். இந்நிலையில் போலீசாரைஅசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் கூடுதலாக ஒரு வழக்கை பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். மேலும், காரிலிருந்து தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய பத்திரங்கள்
ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய பத்திரங்கள்

”இதெல்லாம் சும்மா ட்ரையல்” என்பதைப்போல, கைவசம் மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில். “ஆப்ரேசன் அகழி” சோதனைக்காக மட்டுமே மூன்று பட்டியல்கள் தயார் செய்யப்பட்டதாகவும்; அதிலிருந்து ஒரு பட்டியலில் இடம்பெற்ற நபர்களிடம் மட்டுமே தற்போது சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும்; இன்னும் இரண்டு பட்டியல்களோடு அடுத்த கட்ட அதிரடிக்காக காத்திருப்பதாவும் தெரிவிக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் நேரில் புகார் அளிக்குமாறும் அல்லது திருச்சி எஸ்.பி.யின் உதவி எண் 97874 64651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவித்திருக்கிறார், எஸ்.பி. வருண்குமார்.

ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய பத்திரங்கள்
ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய பத்திரங்கள்

தற்போது போலீசார் அதிரடி ரெய்டு நடத்திய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ரவுடிகளின் பெயரை கண்டு பொதுமக்கள் மட்டுமல்ல; இன்றளவும் ஃபீல்டில் கெத்தாக வலம் வரும் ரவுடிகள் பலரும் பீதியில் உறைந்துதான் போயிருக்கிறார்களாம்.

ரூரலை தாண்டி எஸ்.பி.யால் எதுவும் செய்துவிட முடியாது என்று ஏரியாவை மாற்றி கெத்து காட்டி வந்த ரவுடிகளுக்கு, திருச்சி மாவட்டம், திருச்சி சிட்டி, புதுக்கோட்டை மாவட்டம் என ஒருங்கிணைந்த முறையில் ஒரு “ஆபரேஷனை” முன்னெடுப்பார்கள் என்பதை நிச்சயம் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இது உன் லிமிட், இது என் லிமிட் என போலீசாருக்கிடையிலும் ஈகோ இல்லாமல், ஒருங்கிணைந்த முறையில் களமிறங்கியிருப்பதும் தனிச்சிறப்பான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய ஆயுதங்கள்
ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய ஆயுதங்கள்

வழக்கமாக, இதுபோன்ற அதிரடி ரெய்டுகளின்போது ரவுடிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களை கைப்பற்றியதாக கேள்விபட்டிருக்கிறோம். அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ”ஆபரேஷன் அகழி” அதிரடி சோதனையிலிருந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்து பத்திரங்களையும், புரோ நோட்டுகளையும், நிரப்பப்படாத செக்குகளையும் சேர்த்தே கைப்பற்றியிருப்பது பலரின் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம்விட, எந்த ரவுடியிடமிருந்து எந்த வகையிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்ற ஆவலை காட்டிலும், எந்த ரவுடி எந்தக் கட்சியில் எந்தப் பதவியில் இருந்து வருகிறான் என்று வெளியாகும் தகவல்தான் இந்த ”ஆபரேஷன் அகழி”யின் அல்டிமேட் ரகம்!

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

2 Comments
  1. Dinakaran J says

    News excellent

    1. J.Thaveethuraj says

      மகிழ்ச்சி

Leave A Reply

Your email address will not be published.