திருச்சி நிருபரின்.. சீசீசீ.. குற்றச்சாட்டு !
திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிக்கையார்களுக்கு வணக்கம்,
கடந்த ஆகஸ்ட் 21, ந் தேதி த .மு .எ.க.சங்கம் சார்பில் திரு .நந்தலாலா அவர்கள் ஹோட்டல் செவனாவில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினார்,
அக்கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்ததின் பேரில் நானும் விடுதலை – சார்பில் கலந்துக் கொண்டேன் .
“சந்திப்பு முடிந்து ” நான் சென்று விட்டேன்
ஆனால் அந்த செய்தியாளர் சந்திப்புக்கு வந்தவர்களுக்கு (கவர்) பணம் கொடுப்பதை நான் கொடுக்க வேண்டாம் என்று தடுத்ததாக கூறி மிகவும் என்னை தரகுறைவாக சில டுபாகுர் முண்டங்கள் பேசியுள்ளார்கள் என்பதை அறிந்தேன் .
யார்? கொடுக்க தயாராக இருந்தார்களோ அவர்களிடம் ( திரு.நந்தலாலாவிடம்)போய் கேட்க வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு நான் காரணம் என்று கூறுவதும் என்னை தரகுறைவாக பேசுவது கேவலமான பிழைப்பு நடத்துபவர்களின் பிரச்சாரம்.
அண்மை காலமாகவே திருச்சியில் மிக, மிக கேவலமான முறையில் சில பத்திரிக்கையாளர் நடந்து கொள்கிறார்கள் என்று பல்வேறு தரப்பினர் புகார் கூறி வருகிறார்கள் இதனால் யோக்கியமான, நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு சிரமங்கல் அவமானங்கள் ஏற்படுகிறது என்பது 100% உண்மை
பிழைப்பு நடத்தவும் பொறுக்கி திங்கவும்
இது தொழில் அல்ல . நமது நாட்டின் நான்காவது அடையாளம்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்து கூறுவதும் – மக்களுக்கான வாழ்வியல் பாதுக்காப்பிற்கு அறனாகவும் சட்டமும், நியாயமும் நிலைத்திட நமது பங்களிப்பு இருக்க செயலாற்ற வேண்டுமே தவிர பத்திரிக்கையாளர், என்ற பெயரை அடையாளமாக வைத்துக் கொண்டு அசிங்க படுத்துவது கூடாது?
இதை ஏற்க முடியாது இதனை
தடுத்தாக வேண்டும்.
உண்மையான ஒவ்வொரு பத்திரிக்கையாளர்களுக்கும் உள்ள கடமை, உரிமை இது .இப்படியே வளர விட்டால் சமூக விரோதிகளாக மாறுவார்கள் 50,க்கும் 100, க்கும் எதையும் செய்வார்கள்.
அங்கிகாரம் இல்லாத எத்தனையோ பத்திரிக்கைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த பத்திரிக்கை போலவே சிலர் அங்கிகாரம் இல்லாதவர்களாக இருப்பதால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
மிகவும் வெக்கப்பட கூடிய சம்பவங்களில் எல்லாம் ஈடுபடுவதும்
நாம் அறிவோம்.
இனி வரும் காலங்களில்…… ( திருடனே பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல)
அவர்களே திருந்த வேண்டும்.
எதிர் காலங்களில் பத்திரிக்கையாளர் என்கிற உன்னத பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது மேலும் கவர் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அவதூரு பரப்புவது தவறாக பேசுவது முறையானது அல்ல. என்னை பற்றி அவதூரு பேசுபவர்களுக்கு அன்பான வேண்டுகோள்…
யோக்கியமானவன்
மான உணர்ச்சி உள்ளவன்.
உண்மையான பத்திரிக்கையாளன்
இது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள்.
நன்றி –
விடுதலை-பாலு