காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரை இழிவுபடுத்திப் பேசியதாகக் குற்றஞ் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

திருச்சி சிவா காமராஜரைப் பற்றி என்ன பேசினார் என்பதை கேட்காமலேயே தொலைக்காட்சிகளில் வந்த தலைப்புச் செய்திகளை வைத்துக்கொண்டு இவர்கள் நேர்மையற்ற முறையில் போலியாக கொந்தளிக்கிறார்கள்.

எந்த ஒரு தலைவரையும் தனிப்பட்ட முறையில் ஆதாரமின்றி அவதூறு செய்தாலும், இழிவுபடுத்தினாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

திருச்சி சிவாவின் பேச்சை நான் கேட்டேன். அவர் எந்த இடத்திலும் காமராஜரை இழிவுபடுத்தும் எண்ணத்திலோ தொனியிலோ பேசவில்லை.

அவர் அறிந்த வரலாற்று உண்மைகளைச் சொல்லி இருக்கிறார். இதுகுறித்து பிபிசி தமிழ் விரிவாக செய்தி வெளியிட்டி ருக்கிறது. சிவா பேசிய செய்திகள் புதியவையல்ல.

அனைத்தும் முன்பே வெளிவந்தவை தான். அப்போதெல்லாம் வாய்மூடி இருந்தவர்கள் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அதை ஒரு பிரச்சனையாக்கிக் கொந்தளிப்பதற்கு நேர்மையான காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

திருச்சி சிவா - காமராஜர்
திருச்சி சிவா – காமராஜர்

காமராஜர் மிக எளிமையாக வாழ்ந்த தலைவர் என்பதிலோ, லஞ்ச ஊழல் புகார்களில் சிக்காத நேர்மையான மனிதர் என்பதிலோ, அடித்தட்டு மக்கள் நலனைப் பற்றி அதிகம் சிந்தித்தவர் என்பதிலோ யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. காமராஜர் கலந்து கொண்ட கூட்டங்கள் பலவற்றை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.

ஆனால் காமராஜர் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட கட்சியா? நிச்சயம் இல்லை. அது முழுக்க முழுக்க மிட்டா மிராசுகள் ஜமீன்தார்கள் பணக்காரர்கள் இவர்களுடைய கட்சியாகத் தான் அன்றைக்கு மிருந்தது. இன்றைக்கும் இருக்கிறது.

காமராஜர் குளிர்சாதன வசதியை பயன்படுத்தினாரா இல்லையா என்பதை மிக எளிதாக விசாரித்து அறிந்து கொள்ள முடியும். ஆனால் அத்தகைய முயற்சி எதையும் எடுக்காமல் தொலைக்காட்சி செய்திகளை அரைகுறையாகப் பார்த்துவிட்டு போலியாக கொந்தளிப்பதை போல அருவருப்பான அரசியல் வேறு எதுவும் இல்லை.

Flats in Trichy for Sale

காமராஜர் எளிய மனிதர் தான். ஆனால் திருமலைப் பிள்ளை தெருவில் இருக்கும் அவர் வாழ்ந்த வீடு ஒன்றும் குடிசை வீடு அல்லவே. அல்லது ஒற்றைப் படுக்கையறை கொண்ட சிறிய வீடும் அல்லவே. வசதியான வீடு தான். அதை யாரும் தவறு என்று சொல்ல மாட்டார்கள். சொல்லவும் கூடாது.அதே காமராஜர் வாழ்ந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கவிஞர் ஜீவா ஒரு குடிசை வீட்டில் தான் வாழ்ந்தார் என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு முன்னாள் முதலமைச்சர், இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் மிகப்பெரிய தலைவராக விளங்கியவர் குளிர்சாதன வசதியை அனுபவித்தார் என்பது ஒரு பெரிய குற்றமல்ல.

குளிர்சாதன வசதியை அனுபவித்தார் என்பதனாலே அவர் ஆடம்பரமான மனிதர் என்று நியாய உணர்வு படைத்த யாரும் எடை போடவும் மாட்டார்கள்.

தன்னுடைய தலைவர் கலைஞர் எப்படி மாற்றுக் கட்சியினரின் நலனிலும் அக்கறை கொண்டவராக இருந்தார், காமராஜர் போன்ற பெரிய தலைவர்களை மதித்து நடந்தார், அவரின் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் சிவா பேசியிருக்கிறார்.

எந்த இடத்திலும் காமராஜரை அவர் இழிவுபடுத்தவில்லை என்பதை அவரைப் பேச்சை கேட்டால் எளிதாக விளங்கும்.

அரசியல் நடப்புகளை வெறுப்பு விருப்பின்றி நேர்மையாக ஆய்வு செய்து உண்மையை கண்டறிந்து கருத்து சொல்வது என்ற அடிப்படை பண்பை தூக்கி எறிந்து விட்டு எந்த ஒரு நிகழ்ச்சியையும் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்கு ஏற்றவாறு திரித்துப் புரட்டி சமூக ஊடகங்கள் வழியாகப் பிரச் சாரம் செய்வது என்ற அநாகரிகமான போக்குகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.

செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளி வருகின்ற பல தவறான திரிக்கப்பட்ட செய்திகளை அப்படியே எடுத்துக்கொண்டு கும்பலோடு கும்பலாக கும்மி அடிப்பது என்கிற போக்கு ஒரு அபாயகரமான அநாகரிகமான போக்கு.

எந்த ஒரு அரசியல் சமூக சிக்கல் குறித்தும் அவரவரின் கட்சி நிலைபாடுகளுக்கு ஏற்ப கருத்தைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளை திரித்துப் புரட்டுவது நாணயமற்ற செயல். அது யாராக இருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்இது ஒரு தீய பண்பாடு.

காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று காங்கிரஸ்காரர்கள் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். காமராஜர் ஆட்சியில் கல்வித் துறையிலும் பொதுப்பணி துறையிலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாலும் காமராஜர் ஆட்சி வறுமை தாண்டவம் ஆடிய கொடூரமான காலம் என்பதை அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் அறிவார்கள். காமராஜர் மீது ஊழல் புகார் இல்லையே தவிர அவர் ஆட்சியின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்ற வள்ளுவரின் சரியான நெறியில் தான் யாரையும் மதிப்பிட வேண்டும். அதேபோல் எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற முறையில் தான் விருப்பு வெறுப்பின்றி உண்மையை உணர்ந்து கருத்துக்களை சொல்ல வேண்டும்.

கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக வுக்குத் தீனி போடும் வேலையைச் செய்ய வேண்டாம்.

தோழர்.காளியப்பன் – தஞ்சை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.