திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு – விரிவாக்கத்துறை ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சார்பில் ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் குளம் தூர்வாரும் பணி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு-விரிவாக்கத்துறை ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் ஆர்ச்சம்பட்டி ஊராட்சி ஆகியவை இணைந்து ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள குளம் தூர்வார பூமி பூஜை 06.10.2024 காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
இப்பூமி பூஜையில் செப்பர்டு-விரிவாக்கத்துறை இயக்குனர் அருள்தந்தை சகாயராஜ் ஆசீர்வதித்து தொடங்கிவைத்தார். ஆர்ச்சம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் தேவிகா கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றினார்.
இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட்டின் தலைவர் ரொட்டேரியன் ராமகணேசன், ரொட்டேரியன் நாகராஜ் மற்றும் ரோட்டரி கிளப்பின் செயல் நிர்வாகிகள், செப்பர்டு – விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், ஆசிரியர் கோவிந்தராஜ் இளங்கலை இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட ஏராளமான ஊராட்சி மன்ற நிர்வாகிகளும் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குளம் தூர்வார தேவையான ஜேசிபி எந்திரங்கள் மூலம் வேலையைத் தொடங்கினர்.