கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள் – மிரட்டும் ரயில்வே நிர்வாகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள் – மிரட்டும் ரயில்வே நிர்வாகம் !

ரயில்வே கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து டிடிஇக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கடந்த மே 9ம் தேதியிருந்து  களமிறங்கியது டிஆர்இயூ. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஸ்டேஷன் டிடிஇக்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வருவாய் நிலையை காட்டவில்லை என்று கூறி அடாவடியாக டிரான்ஸ்பர் செய்வதும், ஸ்லீப்பர் டிடிஇக்கள் எச்பி (அதிக அபராதம்) அதிகப்படியான வருவாய் காட்டவில்லை என்று சொல்லி 11 டிடிஇக்கள் உடனடியாக கிரவுண்டிங்.

Frontline hospital Trichy

கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள்
கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள்

குறைவாக வருவாய் காட்டியவர்கள் என்று அடையாளப்படுத்தி 44 எஸ்எல்/டிடிஇக்களின் ஏப்ரல் மாத டிஏ ஜோர்னல்ஸ்ஐ எடுத்துக்கொண்டு ஏசிஎம்ஐ பார்க்க வேண்டும் என்ற கட்டளை. அதிகார ஆணவத்தின் உட்சபட்சமாக அதிக அபராதம் இல்லை என்பதற்காக ஒருவரை டிக்கெட் செக்கிங் பாய்ன்ட் இல்லாத அகஸ்தியம்பள்ளிக்கு டிரான்ஸ்பர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி கோட்ட டிஆர்எம்மே… எஸ்எல்/டிடிஇக்கள் அதிகப்படியான எச்பி வருவாய் காட்ட வேண்டும் என்பது எப்படி சாத்தியப்படும்? ஒரே வண்டியில் ஸ்லீப்பர் ஸ்குவார்டுகளை வருவாய் காட்ட சொல்வதும் மறுபுறம் ஸ்லீப்பர் டிடிஇக்களை அதிக அபராதம் (எச்பி) காட்டச் சொல்வது சரியா?

கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள்
கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள்

தினமும் ஒரு உத்தரவு கடும் மன உளைச்சலில் பணிபுரியும் எஸ்எல்/டிஇபிஓ இன்சார்ஜஸ் மற்றும் டிக்கெட் செக்கிங் ஊழியர்கள், திருச்சி கொட்ட கமர்சியல் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், கிரவுண்டிங் செய்யப்பட்ட 11 டிடிஇகளின் உத்தரவை ரத்து செய்ய கோரியும் மே 9ம் தேதி முதல் திருச்சி டிஆர்இயூ சிஐடியூ சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டம் துவங்கியது.

கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள்
கருப்பு பேஜ் அணிந்து போராடும் திருச்சி டிடிஇக்கள்

கருப்பு பேஜ், கருப்பு கொடி என்று திருச்சி ரயில் ஜங்சன் முறையில் அமைதியான முறையில் போராட்டம் துவங்கிய முதல் நாளில் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியான நிலையில், புகைப்படங்கள் வெளியான டிடிக்களிடம் டிரான்பர், சஸ்பெண்ட்  மன்னிப்பு கடிதம் கொடு என்று சிலர் மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.  தென்னக ரயில்வே துறையில் எந்த டிவிசனில் இல்லாத டிக்கெட் ஊழியர்களின் பிரச்சனை திருச்சி கோட்ட கமர்ஷியல் நிர்வாகத்தில் மட்டும் நடப்பது ஏன் என்கிற கேள்விக்குறியோடு, இது குறித்தும் ஒரு துண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் டிஆர்இயூ.  அமைப்பினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.