முதல் பெண்ணை பற்றி தான் எல்லாருக்கும் தெரியுமே ! இரண்டாவது பெண்ணை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் !
முதல் பெண்ணை பற்றி தான் எல்லாருக்கும் தெரியுமே 600/ 600 எடுத்து சாதனை படைத்தவர், இரண்டாம் பெண்ணை பற்றியும் தெரிந்து கொள்வோம் “ஸப்ரின் இமானா”தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான + 2 தேர்வின் முடிவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இக்பால் நகர் ஆமினா அம்மாள் தெருவைச் சேர்ந்த பெருந்தரகன் சிராஜ் அவர்களின் மகள் மாணவி “ஸப்ரின் இமானா அவர்கள் 590/ 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ்வழிக் கல்வியில் கணித பாடக் குரூப்பில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.,
இவர் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும் கணித பாடத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
எந்தக் கல்விப் பின்புலமும் இல்லாத சாதாரண எளிய குடும்பத்திலிருந்து கல்வி பயின்ற சாதனைப் பெண் ஸப்ரின் இமானா கடையநல்லூர் கல்வி வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத ஒரு புதிய சாதனை மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து. தமிழநாடு மாநிலக் கவர்னர், கவர்னர் மளிகைக்கு அழைத்து பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.