திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரைடு!
போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும் திரு. அழகரசு என்பவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக இவர் குடியிருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அகிலா அப்பார்ட்மெண்ட் என்ற வீட்டில் இன்று 27.10.2022 காலை 6 மணி முதல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் திரு பாலமுருகன் மற்றும் போலீசார் இவரது வீட்டை சோதனை செய்து வருகின்றனர்.