அம்பலமாக காத்திருக்கும் உண்மைகள்…. பீதியில் பேராசிரியர்கள் !
அம்பலமாக காத்திருக்கும் உண்மைகள்…. பீதியில் பேராசிரியர்கள்!
மதுரை காமராஜர் பல்கலைகழகமா, ‘காம’ ராசாக்களின் கூடாரமா? என்ற தலைப்பில் கடந்த இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அடுத்தடுத்து பேராசிரியர்கள் பாலியல் புகாரில் கைதானது; ஊழியர்கள் பணிநீக்கம்; சம்பளபாக்கி உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இன்னும் அம்பலத்துக்கு வராத சங்கதிகள் நிறைய புதைந்து கிடக்கிறது என்பதையும் அவற்றை வெளிக் கொணர அங்குசம் செய்தியாளர் குழு களத்தில் இறங்கியுள்ளது என்பதையும் பதிவு செய்திருந்தோம். இதழை வாங்கிப்படித்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என பலரும், ”எங்கள் மனதில் உள்ளதை நாங்கள் சொல்ல நினைத்ததை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்” என்றே சொன்னார்கள்.
“நகரத்து பெண் பிள்ளைகளைப் போல, இவர்கள் யாரும் வீட்டில் பெற்றோர்களிடம் தமக்கு நேரும் கொடுமைகளை மனம் விட்டு சொல்வதில்லை. பெரும்பாலும் கிராமத்து பெண் பிள்ளைகள் என்பதால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல், தனக்குள் புழுங்கிக்கொள்கிறார்கள் அல்லது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். உப்புத் தின்னவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டித்தே ஆக வேண்டும்.” என ஆவேசப்பட்டார், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
”நான் இங்கே வேலை செய்றதால, நான் வெளிப் படையா சொல்ல முடியாது. என் சட்டைய கழட்டி ருவானுங்க… பக்கத்துல இருக்கிற என்.பி. கோட்டை போலீஸ்டேஷன் போயிட்டு விசாரிச்சு பாருங்க சார். இங்க என்னென்ன நடந்துச்சுனு அவங்க சொல் வாங்க” என கைகாட் டினார், கடைநிலை ஊழியர் ஒருவர். நாமும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சென் றோம். ஆய்வாளர் விடுப் பில் இருப்பதாக கூறிய தோடு, சமயநல்லூர் காவல் துணைக் கண்காணிப் பாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் கை காட்டினார் நிலைய காவலர் ஒருவர்.
சமயநல்லூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர் அவர்களை சந்தித்தோம். ”பேராசிரியர் கருப்பையா போக்சோ சட்டத்தின் கீழும் பேராசிரியர் சண்முகராஜா பி.சி.ஆர். சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. விடுதியில் இறந்த தேனியை சேர்ந்த மாணவி மகேஸ்வரி இரவு செல்போன் பேசிக்கொண்டே மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். அதில் மர்மம் ஏதுமில்லை. விழுப் புரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த, பேரா சிரியர் சண்முகராஜா தற்போது மதுரை நாக மலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வருகிறார்.” என்றார் அவர்.
அடுத்தநாள் பேரா சிரியர் சண்முக ராஜா வையும் சந்திப்பது என்ற முடிவோடு காத்திருந்தோம். “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது என்னால் பேச முடியாது. வழக்கு முடியட்டும். நானே உங்களை அழைத்து பேசுவேன். உங்களிடம் பேச விசயங்களும் இருக்கிறது.” என பொடிவைத்து பேசி விட்டு போனதோடு நமது எண்ணையும் மறக்காமல் வாங்கி சென்றிருக்கிறார், பேரா சிரியர் சண்முகராஜா.
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், “எம்.பில்., பி.எச்.டி., என ஆய்வு மாணவர்கள் புதிய தாக எதையும் ஆய்வு செய்வ தில்லை. கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்த விசயத்தையே மீண்டும் தூசி தட்டி எடுத்து புதிய ஆய்வு என சமர்ப்பித்து வருகிறார்கள். ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் பேராசிரியர்கள் சிலர் கல்லா கட்டும் வேலையையும் செய்து வருகிறார் கள். துணைவேந்தர் பொறுப்பிற்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது. அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாமல் துணைவேந்தராக தேர்வாகியும் பொறுப்பேற்காமல் போனார் பேராசிரியர் ராமசாமி.
அதேபோல, ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் தங்களுக்கு கீழுள்ள பணியிடங் களில் தங்களது சாதியைச் சேர்ந்தவர்களை தங்களுக்கு அணுசரணையானவர்களையே நியமிக்க முனைப்பு காட்டு கின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளட க்கிய உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில், எமது தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் சார்பில் பல்கலைகழகத்தை முற்றுகையிடுவோம்..” என்று எச்சரிக்கை விடுக்கிறார், அவர்.
சீருடை யணியாத மேலிட த்து போலீசார் சிலர் பல்கலை கழக வளாகத்தில் இரண்டு நாட்களாக தீவிர விசாரணை மேற் கொண்டதாகவும் அறிகிறோம். எது எப்படியோ, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்டு ஏதோ ஒருவகையில் தவறிழைத்த பேராசிரியர்கள் – ஊழியர்கள் பலரும் பீதியில் உறைந்திருப்பதாக நம்பகமான தகவல்கள் வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளை நபர்களை அணுகி, கமுக்கமாக முடித்து கொள்வதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அறிகிறோம். காமராஜர் பல்கலைகழகத்தில் நடைபெறும் கூத்துக்கள் அனைத்தையும் கூர்மையாக கண்காணித்துவருகிறது அங்குசம் செய்தியாளர் குழு. பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்த பட்ட நபர் களிடம் பேசி ஆதாரங்களை திரட்டி வருகிறது.
அடுத்த இதழில் குபீர் தகவல்களுடன் உண்மையை வெளிச்சம்போட்டு காட்ட காத்திருக்கிறது, உங்கள் அங்குசம் இதழ்
-ஷாகுல், படங்கள் – ஆனந்த்
மதுரை காமராஜர் பல்கலைகழகமா, ‘காம’ ராசாக்களின் கூடாரமா? என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியிட்ட செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? வீடியோ !