அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டிவி செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கு! திமுக எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் !

திருச்சியில் அடகு நகையை விற்க

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி அய்யர்மலை பகு தியில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம் எல்ஏ பழனியாண்டியின் மகன் விம லாதித்தன் (32) என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் டிவி செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின் உட்பட 5 பேர் கடந்த மாதம் 30ம் தேதி குவாரி பகுதியில் டிரோன் கேமரா மூலம் படம் எடுக்க முயற்சித்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மொ.பழனியாண்டி
மொ.பழனியாண்டி

இதையடுத்து அங்கு வந்த எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன், சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத 20 பேர், கதிரவன், செபாஸ்டின் உட்பட 3 பேரை தாக்கி, அவர்கள் வைத்திருந்த வீடியோ, டிரோன் கேமராவை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக குளித் தலை போலீஸ் ஸ்டேஷனில் கதிரவன் புகார் அளித்தார்.

Admission Enquiry Form

இதுகுறித்து கரூர் எஸ்பி ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில், குளித் தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலை மையில் போலீசார் கடந்த 5ம் தேதி ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அவரது மகன், அவரது சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்து, பெயர் தெரியாத 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே வழக்கில் கல்குவாரி தொடர்பாக பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் பழனியாண்டியின் மகன் விமலாதித்தன்(32) தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில் திருநெல்வேலி சுடலைக்கண்ணு, முசிறி திருமலை ராஜன், தனியார் டிவி செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின், முசிறி ராஜமாணிக்கம் ஆகிய 5 பேர் மீது குளித்தலை போலீசார் 4 பிரிவு களின் கீழ் கடந்த 5ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், பழனியாண்டியின் சகோதரர் பெரியசாமி ஆகிய 3 பேரும் கரூர் குற்றவியல் கோர்ட் ஒன்றில் நேற்று ஆஜராகினர். இவர்கள் 3 பேருக் கும் நீதிபதி பரத்குமார், நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.