இமெயில் வெடிகுண்டு மிரட்டல் ! மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை….

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து  மதுரை  மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்உள்ள பழைய கட்டிடம் கூடுதல் கட்டிட வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தியிருந்த 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் 20-க்கும் மேற்பட்டவெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் மூலமாக  தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்கள், வாகனங்கள் நிறுத்தமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் இமெயில் மூலமாக அனுப்பப்பட்ட தகவல் புரளி என தெரியவந்தது.

 —  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.