அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

லட்சங்கள் இருந்தால் பதவி ! மிரட்டும் மாவட்டச் செயலாளா் ! தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக வெற்றி கழக மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த திருநகர் பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்பவர் தற்போது சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் மதுரை தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி தன்னிடம் ரூ.16 லட்சம்  பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவிட்டதாகவும் பணம் தரவில்லை என்பதற்காக தன்னுடைய பதவியை பறித்து விட்டதாக கூறி ஷர்மிளா தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஷர்மிளா
ஷர்மிளா

இந்நிலையில் தவெக பெண் நிர்வாகி ஷர்மிளா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பெண் நிர்வாகியின் பெயர் ஷர்மிளா மகளிரணி தலைவியாக இருந்தவரை தற்போது சுற்றுசூழல் அணி நிர்வாகியாக மாற்றியுள்ளனர். தற்போது மதுரை தெற்கு மாவட்டம் மகளிர் அணி முத்துலட்சுமி என்ற பெண்ணை நியமித்து இருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து முத்துலட்சுமி  என கூறிக்கொண்டே இருப்பார் அவரும் முக்கியம் என்று சொன்னார். முதலில் அமைப்பாளர் இணையமைப்பாளர் என தான் வரும் எனக்கு கீழ் ஒரு ஆளை நியமித்தேன் அதற்கு பதிலாக முத்துலட்சுமியை நியமித்ததாக தலைமையில் பெயர் கொடுத்திருந்தார்கள் ஏன் என கேட்டதற்கு என்னிடம் சண்டையிட்டார்கள். அவர் என்ன சாதி பார்க்கிறாரே என நான் சொன்ன நபர் கேட்டார் உன்னையும் தூக்கி விட்டுட்டு சாதி ரீதியாக தூக்கிவிட்டு முத்துலட்சுமி போடுவார் எனக் கூறினார்கள். அப்படி இல்லை என நினைத்தேன்  நல்ல வசதியானவர்கள் இருந்தால் கட்சியில் சேர்த்து விட்டால் தான் நானும் வளர முடியும் நீங்களும் வளர முடியும் என மாவட்ட செயலாளர் தங்கபாண்டி கூறினார்.

முதல்வர் பிறந்தநாள்

நான் சிலரை அழைத்து வந்தபோது அவர்களிடம் பெரிய தொகை வாங்கிவிட்டு என்னிடமும் பெரிய தொகை வாங்கி விட்டார். காசு இல்லை என்று சொன்னபோது நகையை விற்றாவது காசு கொடுங்கள் என்று கேட்டார். என்ன பண்ணுவியோ ஏதுசெய்வியோ தெரியாது எனக்கு காசு தேவை எனக்கு கடன் பிரச்சினை இருக்கு வண்டி லோன் கட்டனும் என கூறினார். வேற வழியில்லாமல் அவரை ரௌடி என கூறியதால் எனக்கு பயமாக இருந்தது பணம் கொடுக்காமல் போனால் உயிருக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தில் நகை போனாலும் பரவாயில்லை என அடகுவைத்து மாத மாதம்  பணம் கொடுத்தோம்.

தங்க பாண்டி ஐடி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் வட்டி தருவதாக கூறினார்.  இதை நம்பி ரூ.16 லட்சம் எனது அம்மாவின் நிலத்தை அடகு வைத்து கொடுத்தேன்.  இப்போ வரைக்கும் வட்டியும் தரவில்லை. இதனால் வட்டி நான் செலுத்தி வருகிறேன். இதனால் மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். எனது பெற்றோர் காவல்துறையில் பணிபுரிந்து சம்பாதித்த பணமெல்லாம போய்விட்டது. எனது அம்மாவின் நிலம் போனால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். இதோடு நான் செத்துப் போய்விடுவேன் இந்த நிமிஷமே எனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வாங்கி கொடுத்து விடுங்கள்.  தங்கப்பாண்டி மகன் சஞ்சய்கு iphone வாங்கி கொடுத்திருக்கிறேன். அதற்கு வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தயவு செய்து காப்பாற்றுங்கள் இல்லை என்றால் செத்து விடுவோம். இதனால் எனக்கு ஏதாவது ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளது.  கண்டிப்பாக  தங்கப்பாண்டி மூலமாக ஒரு கொலை விழும் என் உயிருக்கு ஏதாவது ஆனால் என் குடும்பத்தாருக்கு என்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது ஆனால் தங்கப்பாண்டி  தான் காரணம்.

தங்க பாண்டியுடன் இருந்த நபர்கள் இப்போது கிடையாது.  இவரை வேணவேவேணாம் என்று போய்விட்டார்கள். புதிய புதியதாக ஆள் சேர்க்கிறார்கள். ரூ.5லட்சம், 10லட்சம் பணம் கொடுத்தால் பதவி த.வெ.கவும் ஊழல் கட்சியாகி கட்சி பெயரை கெடுத்து விடவேண்டாம்.  இப்போ வரை கட்சிமீது மரியாதை உள்ளது. எனக்கு ரொம்ப டார்ச்சர் தருகிறார்கள்.

10 ஆண்களுக்கு நடுவில் என்னை உட்கார வைத்து அசிங்கமாக பேசினார்கள்.  தங்கபாண்டியிடம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர் மீது புகார் உள்ளது என தெரிந்தும் அவரை பதவியில் வைக்கிறார்கள். என்னை மிரட்டி பதவியில் இருந்து விலக்கினார்கள். இந்த பதவியில்  இருந்தால் வேலைக்குபோகக்கூடாதா? கர்ப்பமாக இருக்ககூடாதா நல்ல வேலைக்கு போகிறவர்கள் இதற்கு தலைமையாக இருக்கக் கூடாதா? வேலை வெட்டி இல்லாமல் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள் தான் இங்கு இருக்க வேண்டுமா என கூறியுள்ளார்.

தங்கப்பாண்டி
தங்கப்பாண்டி

*இதுகுறித்து விளக்கமளித்த TVK தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி*

ஷர்மிளா கூறியவை அனைத்தும் பொய். கட்சி தலைமைதான் ‘போஸ்டிங்’ போடுகிறது. இதுவரை யாரையும் தலைமை நியமிக்கவில்லை. நானாகதான் ‘நீங்கள் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக’ இருந்து பணி செய்யுங்கள் என்றேன். அவரும் நிகழ்ச்சி நடத்தி மரக்கன்றுகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்குக்கூட நான் சென்றிருந்தேன். ஷர்மிளாவிடம் எந்த வரவு, செலவும் நான் வைக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதால் யாரோ சிலர் துாண்டுதலின்பேரில் இவர் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். நான் எந்த ஐ.டி., தொழிலும் செய்யவில்லை. எனக்கு விவசாய நிலம் உள்ளது. ஓரிரு ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் இருந்து வருமானம் கிடைக்கிறது என்பதால் யாரிடமும் பணம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு கூறினார்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.