தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும் – தவெக ஆனந்த்
மதுரை பாரபத்தி பகுதியில் த.வெ.க.,வின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அனுமதி பெற மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் த.வெ.க., மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாவது மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார் இன்று காவல்துறையிடம் அனுமதி மனு கொடுக்கப்பட்டுள்ளது மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கண்டிப்பாக வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட 2வது மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்