அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

TVK என்பது கட்சியல்ல, அது ஒரு influencer marketing…

திருச்சியில் அடகு நகையை விற்க

TVK என்பது கட்சியல்ல, அது ஒரு influencer marketing என்று அந்த standup comedian சொன்ன போது எனக்கு முழுமையாக புரியவில்லை. நேற்று தான் அதன் பொருள் முற்றிலும் புரிந்தது. விஜய்யை பற்றி பேச ஒரு வீடியோவிற்கு 30000 ரூபாய் தருகிறார்களாம்.

அனைத்து கட்சிகளும் ஐடிவிங் நடத்துவார்கள். சம்பளத்திற்கு ஆட்கள் இருப்பார்கள். Paid promotions என்பது தேர்தலின் போது நடக்கும். தங்களது சாதனைகளை அல்லது பரப்புரை…ம்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஆனால், தவெக இதை பல ஆண்டுகளாக செய்கிறது என்பது தெரிகிறது. விஜய் பட பிரோமசன், 1000 கோடி கலெக்சன் என பரப்புரை செய்வது, மற்ற நடிகர்களின் படம் வந்தால் அவர்களை காலி செய்ய பணம் தருவது என இவர்கள் செய்து இருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் அரசியலிலும் இதே பாணியை தான் பயன்படுத்துகிறார்கள் என்பதும், 41 உயிர்கள் போனபின்னும் அவர்களால் இதே influencers வைத்து conspiracy theory க்களை பரப்ப முடிகிறது என்பதும், எவ்வித அறமும் இல்லாமல் இவர்களால் செயல் பட முடியும் என்பதும் நேற்று வெளியான அந்த ஆடியோவில் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது!

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

Loop ல இருந்து ராகேஷ் பேசுறேன் ப்ரோன்னு கவின்னு ஒரு influencer கிட்ட பேசுற ஆடியோ. இன்னக்கி சாயங்காலம் தளபதியின் ஒரு வீடியோ வரும், அதுல அவர் எமோசனலா பேசியிருப்பாரு, அத வச்சி நீங்க – அவர் எமோசன்ஸ புரிஞ்சிக்குங்க, குடும்பத்துல 41 பேர் செத்து இருக்காங்கன்னு அவரு சோகத்துல இருக்காரு. போலீஸ் தான் அவரை கரூர் வரவேணாம், வந்தா கலவரம் நடக்கும்ன்னு சொல்லி தடுத்து இருக்காங்க, இது நம்ம யாருக்கும் தெரியலன்னு பேசி வீடியோ போடுங்கன்னு சொல்றார் ராகேஷ். இது சரியா வரும்னு தோணல ப்ரோ, பயமா இருக்கு என எதிரில் இருப்பவர் மறுக்கிறார்.

நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியும் ப்ரோ, நாங்க இருக்கோம், இன்னும் தளபதியோட ஜனநாயகன் வரப்போகுது, உங்கள கவனிச்சிக்கிறோம், இப்ப சின்ன சின்ன ஊர்ல இருக்குற ஐடிகளையும் நாங்க எடுத்துட்டு இருக்கோம், இந்த Payroll ல நீங்க வந்துட்டீங்கன்னா நல்லா சம்பாதிக்கலாம் என ராகேஷ் convince பண்ண முயல்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால் எதிரில் இருப்பவர் convince ஆகல. உடனே போன வீடியோக்கு 20000 தந்தோம் இந்த வீடியோ 30000 தருகிறோம். தளபதி வீடியோவை கீர்த்தி சுரேஷ்ல இருந்து பல நடிகர்கள் பகிர்வார்கள். இந்தியா முழுக்க நாங்க influence பண்றோம். Local லயும் இதை பரப்ப தான் உங்க கிட்ட பேசுறோம் என்கிறார் ராகேஷ்.

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய் tvk leader vijay  videioஇந்த கவி என்பவர் மனசாட்சி உள்ளவர் போல. கடைசிவரை அந்த ஆடியோவில் அவர் ஒத்துக்கொள்ளவில்லை!

இவர்கள் loop, route என எத்தனை பேரில் எத்தனை பேருக்கு எவ்வளவு காசை கொடுத்து வீடியோ போடுகிறார்கள் என்பதை காணும் போது இவர்களிடம் இவ்வளவு காசும், இதை தமிழ்நாட்டில் இரைக்க நினைக்கும் மனநிலையும், தமிழ்நாட்டை பதட்டநிலையில் வைத்திருக்க நினைக்கும் முயற்சியும், 41 மனிதர்கள் இறந்ததை நேரில் கூட பார்க்க வராத ஒரு சைக்கோவிற்கு இவர்கள் தரும் நாடக முட்டும், இவர்கள் பாஜகவின் overall payroll ல் இருப்பார்களோ என்று வரும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

இவர்களின் payroll ல் இருப்பவர்களை கணக்கெடுத்தால் அது ஆக்டோபஸ் கரங்களாக நீளும் என்கிறார்கள்.

முழுமையான உண்மைகள் வெளியாகி இதன் பின்னால் இருக்கும் சமூக விரோதிகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். நிறைய இரத்தம் குடிக்க இந்த கூட்டம் காத்திருக்கிறது!

தமிழ்நாடு காக்கப்படட்டும்!

 

 —   ராஜராஜன் RJ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.