“த.வெ.க., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் செந்தில்நாதன் , நள்ளிரவில் அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி முனிரா பானு வீட்டில் இருந்தார். அந்த பெண்மணியின் உறவினர்கள், வீடு புகுந்து இதை தட்டிக்கேட்டனர்” என்று தகவல் வெளியாகி இருக்கிறது.(சம்பந்தப்பட்ட இருவரும், மறுத்து வெளிப்படையாக விளக்கம் அளித்து உள்ளனர் என்பதால் அவர்களது பெயர்களை குறிப்பிடுகிறேன்.)
முனிரா பானுவின் உறவினர்கள் சொல்வது போல, அந்த இருவருக்கும் நெருக்கம் இருந்தால், இருவரது குடும்பத்தினர்தான் அது குறித்து பேச வேண்டும். உறவினர்கள் அல்ல. அப்படியே பேசினார்கள் என்றாலும், வீடியோ எடுத்து பொது வெளியில் பரப்பியது தவறு.
“அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்தார்” என்கின்றனர், சாயிரா பானுவின் உறவினர்கள். “இல்லை” என்கிறார்கள் இருவரும். (இதை விவகாரமாக்கியது தி.மு.க. என அந்த பெண்மணி சொல்வதை நான் ஏற்கவில்லை. நான் மட்டுமல்ல.. எவரும் ஏற்க மாட்டார்கள்!)
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மா.செ. செந்தில்நாதன் மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இருவரும்தான் அப்படி நடக்கவில்லை என்கிறார்களே.. ஏன் இந்த நீக்கம்..? அப்படியே நடவடிக்கை என்றால், இருவர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கலாமே..
தவிர, வேறு பல கட்சி முக்கியஸ்தர்களும் இப்படியான புகார்களில் சிக்கியவர்கள்தான். அந்தந்த கட்சிகள், எத்தனை சம்பவங்களில் நடவடிக்கை எடுத்தன, எத்தனை சம்பவங்களில் கண்டுகொள்ளாமல் விட்டன என்பதெல்லாம் அனைவரும் அறிவர்.
இது தவெக விவகாரம் என்பதால், அந்தக் கட்சியை வைத்தே உதாரணம் சொல்ல வேண்டி இருக்கிறது.
சமீபத்தில் அந்தக் கட்சியில் இணைந்த இருவர் குறித்தும் இப்படிப்பட்ட புகார்களை அவர்களது குடும்பத்தினரே எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின. வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களதுபெயர்களை தவிர்க்கிறேன்.
இன்னொரு விசயத்தை பெயருடன் சொல்ல முடியும்..
ஏற்கெனவே திருமணம் ஆனவர் தவெக தலைவர் நடிகர் விஜய். அவர், நடிகை த்ரிசாவுடன் விமானத்தில் வெளியூர் செல்கிறார் அங்கு சில நாட்கள் தங்குகிறார். அது குறித்து இருவரும் பேசுவதில்லை. இதை சரி , தவறு என பிறர் பேச முடியாது. அது அவர்களது விருப்பம். இது குறித்து அவரவர் குடும்பத்தினர்தான் பேச வேண்டும்.
ஆமாம்.. சம்பந்தப்பட்ட பெண்மணி புகார் கொடுத்தால் அது பொது விசயம் ஆகிறது. யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நவடடிக்கை எடுக்கலாம்.
அப்படி ஏதுமில்லாத நிலையில்.. நாமக்கல் மா.செ.வும், அந்த பெண்மணியும் மறுத்தும்கூட.. மா.செ.வை நீக்கி இருக்கிறார்.
அப்படியானால் விஜய்கூட தன்னைத்தானே கட்சியை விட்டு நீக்கிக்கொள்ள வேண்டி இருக்கும்.
விஜயின் பேச்சு, அரசியல் நடவடிக்கை எதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், “மாற்றத்துக்காக புதிய கட்சி துவங்கி இருக்கிறேன்” என்பவர், “ஜனநாயகன்” என்கிற பெயரில் படம் எடுப்பவர்.. ஜனநாயகப்படி நடக்க வேண்டாமா
(எவரது தனிப்பட்ட செயலையும் நான் இதுவரை விமர்சித்தது இல்லை… விஜயின் நடவடிக்கை பாய்ந்ததை அடுத்து கேள்வி எழுப்புகிறேன்.. அவ்வளவுதான்!)
– டி.வி.சோமு








Comments are closed, but trackbacks and pingbacks are open.