அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முன்னிலை வகிப்பது யார் ? பட்டப்பகலில் பட்டாக்கத்தி அரிவாளுடன் மோதிய விஜய் கட்சியினர் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

முன்னிலை வகிப்பது என்பதில் ஏற்பட்ட தகராறில்  பட்டாக்கத்தியுடன் தவெக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டு  வெட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் புதூரில் தவெக கட்சி நிர்வாகிகள் நேற்று காலை நடிகர் விஜயின் பிறந்தநாள் விழாவில்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அப்போது  நகரச் செயலாளர் சசிகுமாருக்கும் கீழ் புதூர் கிளைச் தலைவர் நாகராஜுக்கும் இடையே யார் தலைமை வகிப்பதில்  ஏற்பட்ட மோதலில் நகர செயலாளர் சசிகுமார் உத்தரவின் பேரில் கிருஷ்ண கிரி அடுத்த பாஞ்சாலியூரை சேர்ந்த தபு- 26, 10 பேருடன் வந்தார்.

தவெக கட்சி நிர்வாகிகள்அவர் நாகராஜிடம், ‘எங்களை கேள்வி கேட்பதற்கு நீங்கள் யாருடா’ எனக் கேட்டு கத்தியை சுற்றியாவாறு இடுப்பில் சொருகி வைத்திருந்த  பட்டாக்கத்தி எடுத்து  உள்ளூர் நிர்வாகிகளை வெட்ட  தொடங்கினார் ,  அவரின் காரில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும்  கூறப்படுகிறது  கீழ் புதுார் பார்த்திபன்-28, முருகேசன்-35, மற்றும் 17 வயது சிறுவன் படுகாயம் மடைந்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பதிலுக்கு நாகராஜ் தரப்பினர் தாக்கியதில், தபுவுடன் வந்த , கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த அருண், 26, ஹரிராம், 22, பார தியார் நகர் சஞ்சய், 22 ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்த கார் கண்ணாடிகளை உடைக்கப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பிறந்தநாள் கொண்டாடிய சில நிமிடங்களில், அங்கு வந்திருந்த  விஜய் கட்சியினர் கிழ்புதூர் ஊர்மக்கள் கண்முன்னே  அரிவாளால் வெட்டத்தொடங்கிய காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சி நிர்வாகிகள்இந்த சம்பவத்தில் பார்த்திபன் அளித்த புகாரில் தபு, அருண், சஞ்சய், ஹரிராம், விக்னேஷ், சலீம், 31 ஆகிய, 6 பேர் மீது வழக்குப்பதிந்து, விக்னேஷ், சலீமை கைது செய்தனர். அதே போல அருண் அளித்த புகாரின் பேரில் விஜய், 39, முனி, 49, வெங்கடேஷ், 25 ஆகியோரை கைது செய்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தபு உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். தபு மீது போலீசில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பட்டப்பகலில்  பட்டாக்கத்தியுடன் வெட்டிய சம்பவம்  அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவெக  தலைவரின் கொள்கையை காட்டுகிறது அண்ணன் திரையில கத்தியை தூக்குகிறார் தொண்டர்கள் நிஜத்தில்  தூக்குகிறார்கள் இதுக்கும் அதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழியே  என இணையவாசிகள் கண்டித்துள்ளனர்.

 

—   மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.