அடுத்த,”ஏழரையை” கூட்டினார் திருச்சி சூர்யா சிவா… திருட்டு மணல் எடுப்பவர்களின் பாதுகாவலர் “கே.என்.நேரு…”
அடுத்த,”ஏழரையை” கூட்டினார் திருச்சி சூர்யா சிவா… திருட்டு மணல் எடுப்பவர்களின் பாதுகாவலர் “கே.என்.நேரு…”
“ஆபாச” அர்ச்சனை “புகழ்” திருச்சி சூரியா சிவா, தனது அடுத்த “ஏழரையை” தொடங்கி உள்ளார்.
திருட்டு மணல் எடுப்பவர்களின் பாதுகாவலர் கே.என்.நேரு என்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரியா,வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூரியா சிவா. தந்தையை போல திமுகவில் ஏதும் லிஃப்ட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தலைமை கண்டுகொள்ளவே இல்லை. பாஜகவுக்கு தாவினார். அங்கு அவருக்கு மாநில ஓ.பி.சி அணி பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த டெய்சி என்பவரை,காலை 6மணிக்கு தொலைபேசியில் அழைத்து அவரை மிகமிக கேவலமாக,படு ஆபாசமான வார்த்தைகளால் சூர்யா திட்டினார்.
இது குறித்த பதிவுகள் இணையங்களில் பரவி இரண்டு பேரின் அரசியல் பயணத்திலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இது குறித்து பாஜக மேலிடம் இருவரிடமும் விசாரித்தது. பின்னர் அவர்கள் இருவரும் அளித்த பேட்டியில் நாங்கள் இருவரும் அக்கா.. தம்பி…பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டோம் என்றனர். இதையடுத்து பாஜக ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து திருச்சி சூர்யா சிவா, 6மாத காலத்திற்கு சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
டெய்சி மீது நடவடிக்கை இல்லை.
இந்த பிரச்சினையில் ஊரில் உள்ள மாதர் அமைப்புகள் சூர்யா சிவாவை கழுவி…கழுவி ஊற்றின. சில அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த சிக்கலில் இருந்து சூர்யா, கடந்த ஒருவாரம் அமைதியாக இருந்தார்.
ஆனால் “சொறி”பிடித்தவன் கை சொறிந்து கொண்டே இருக்கும் என்பது போல தனது அடுத்த ஏழரையை சூரியா சிவா,இன்று 2ம்தேதி காலை துவக்கினார்.
தனது அஃபிஷீயல் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் வீடியோவில் சாலையில் மாட்டு வண்டிகளில் சிலர் திருட்டு மணல் அள்ளி செல்கின்றனர். அதில் ஒரு மாட்டு வண்டி பக்கவாட்டில் கே.என்.நேரு என்ற பெயர் திமுகவின் கருப்பு சிவப்பு கவரில் எழுதப்பட்டுள்ளது. இந்தபதிவை வெளியிட்டுள்ள சூர்யா,தனது கருத்தாக திருட்டு மணல் எடுப்பவர்களின் பாதுகாவலர் கே.என்.நேரு என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியான சில மணி நேரத்தில் பதிவு மற்றும் வீடியோவை 4,354பேர் பார்த்துள்ளனர்.
724பேர் லைக் செய்து உள்ளனர்.
சூர்யாவின் விஞ்ஞான அரசியல் எங்கே போகிறது என்பதில் அந்த அண்ணாமலைக்கே வெளிச்சம்….
-அரியலூர் சட்டநாதன்