விருதுநகரில் அரசு உதவித்தொகை பெற ரூ.1000 லஞ்சம் வாங்கிய இரண்டு ஊர்நல பெண் அலுவலர்கள் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகரில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்த கூலி தொழிலாளியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஊர்நல பெண் அலுவலர்கள் 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 8 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 அரசு ஊழியர்கள் உட்பட 11 நபர்களையும் கைது செய்து குறிப்பாக ஜூலை மாதத்தில் மட்டும் 5 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 அரசு ஊழியர்கள் உட்பட 7 நபர்கள் கைது செய்து மொத்தம் ரூ.1,51,500 தொகையையும் பறிமுதல் செய்து அதிரடி காட்டி வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

அந்த வரிசையில் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி விருதுநகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜெயமுருகன் (25) வாடகை வீட்டில் வசித்து பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பாண்டீஸ்வரி இந்த தம்பதியினருக்கு மாதவி, முத்ரா என்ற இரண்டு பெண் குழந்தை உள்ளதால்  தமிழக அரசு திட்டமான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பத்தில் பெண் குழந்தையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான நபர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் விகதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை ரூ.50 ஆயிரம் பெற கடந்த ஆண்டு 23.11.2023 ஆம் தேதி தனியார் இ- சேவை மையம் மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார் ஜெயமுருகன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உதவித்தொகை பெற விண்ணப்பித்து பல மாதங்கள் ஆனதால் இது தொடர்பாக ஜெயமுருகன் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மகளிர் ஊர் நல அலுவலராக பணிபுரியும் மகேஸ்வரி இடம் இது குறித்து கேட்டுள்ளார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

உதவித் தொகை பெற வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தெரிவிக்க இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயமுருகன் நாங்களே வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதால் தான் அரசின் உதவித்தொகையை நாடி வருகிறோம்.

இதிலும் லஞ்சம் கேட்டால் அதை நான் எப்படி கொடுக்க முடியும் என கூலித் தொழிலாளி ஜெயமுருகன் தெரிவிக்க சரி விடுங்க ஒரு ரூ.1000 மட்டும் லஞ்சமா வெட்டுங்க உங்க உதவி தொகை உடனடியாக கிடைக்க நான் உதவி செய்கிறேன்.
என சொல்லியிருக்கிறார்.

ஜெயமுருகன் சரிங்க மேடம் நீங்கள் கேட்ட பணத்தை தயார் செய்து விட்டு வருகிறேன். அங்கிருந்து சென்ற அவர் லஞ்சப் பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால் இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்து அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று காலை 10 மணி அளவில் சமூக நலத்துறை அலுவலகத்தில் உள்ள ஊர் நல அதிகாரி மகேஸ்வரிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூ.1000 லஞ்ச பணத்தை கொடுத்தனர்.

அவர் இந்த பணத்தை மற்றொரு ஊர் நல அதிகாரியான லதாவேனியிடம் கொடுக்கச் சொல்ல அதை பெற்ற லதாவேணியை அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் சால்வன் துரை,பூமிநாதன், ஆகியோர் லதாவேணி மற்றும் முருகேஸ்வரி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

-மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.