மான்,காட்டு மாடுகளை வேட்டையாடிய இரண்டு பேர் கைது ! தப்பிய ஓடிய நிருபர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு ! !
குரங்கணி மற்றும் கேரளா வனப் பகுதிகளில் மான், காட்டு மாடு வேட்டையாடி வந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேர் கைது மற்றும் ஏழு பேர் தலைமறைவு வேட்டைக்காரனிடமிருந்து இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் மான்கறி காட்டுமாடு கறி பறிமுதல்
தேனி மாவட்டம், போடி தாலுகா, குரங்கணி மலை கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி 54 இவரது மகன் அறிவழகன் 27 இருவரும் மற்றும் தேவாரம் பகுதியைச் சேர்ந்த விஜய் பாபு இவர் ஒரு கள்ளர் மலர் என்ற பத்திரிகையின் நிருபராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுடன் சேர்ந்து கேரளாவை சேர்ந்த ஏழு நபர்கள் ஆகியோர் கேரளா வனப்பகுதி தோண்டி மலை வனப்பகுதி குரங்கணி வனப் பகுதிகளில் இரவு நேரங்களில் மான், காட்டுமாடு, மயில், மந்தி ஆகியவற்றை வேட்டையாடி கறியை உரித்து எடுத்து போடி பகுதிகளிலும் தேவாரம் பாகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இரவு குரங்கணி வனப்பகுதியில் காட்டுமாடு மான் வேட்டையாடி கறியை உரித்தெடுத்து இருசக்கர வாகனத்தில் போடியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் அவர்கள் வைத்து இருந்த மூடையை பரிசோதனை செய்த போது கறி இருப்பது தெரிய வந்தன.
இது என்ன கறி என விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர் சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் வன அலுவலகத்தை அழைத்து வந்து விசாரணை செய்ததில் மான் கறி, காட்டு மாட்டுக்கறி என தெரிய வந்தன.
மூன்று பேரை கைது செய்து அழைத்து வந்த நிலையில் நிருபர் விஜய் பாபு இரு சக்கர வாகனம் தப்பி ஓடி தலை மறைவானார் இவரிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கி 20 தோட்டாக்கள் இரண்டு நேத்தி லைட் பறிமுதல் செய்தனர்.
பிடிவிட்ட குரங்கணியை சேர்ந்த சன்னாசி இவரது மகன் அறிவழகனை கைது செய்து வனத்துறையினர் போடி நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தினர் தப்பி ஓடிய நிருபர் விஜய் பாபு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத ஏழு பேர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
போடி வனப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் காட்டுமாடு மான் பன்றி உள்ளிட்டவைகளை வேட்டையாடி வருவது தொடர் கதை ஆகி வருகிறது. வனத்துறையினர் ரோந்து பணியை அதிகரித்து வேட்டையாடுவதை தடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெ.ஜெ.