காரில் ஆடு திருடிய கும்பலை பிடித்து கிராம மக்கள் !
பாகனேரியில் ஆடு திருடிய கும்பலை பிடித்து கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு.
சிவகங்கை மாவட்டம் பாகனேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆடுகள் தொடர்ச்சியாக திருடு போனதாக கூறப்படுகிறது. இது குறித்து கிராமத்தினர் மதகுபட்டி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர் .
இந்நிலையில், இன்று 23.07.2023 பாகனேரி பிள்ளை வன ஊரணி அருகே காரில் வந்த மூன்று பேர் மேய்ச்சலில் இருந்த இரண்டு ஆடுகளை திருடிக் கொண்டு கடத்த முயன்றனர்.


ஆடு சத்தம் கேட்டு அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் காரை வழிமறித்து அவர்களை பிடித்தனர். இதனை அடுத்து அங்கு கூடிய கிராம பொதுமக்கள் ஒருவர் தப்பித்த நிலையில், இரண்டு பேரை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடம் வந்த போலீசார் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
– பாலாஜிகாரில் ஆடு திருடிய கும்பல்
