திருவாரூர் பெட்டிக்கடை வியாபாரியிடம் நலம் விசாரித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

த்திய நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன் சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.  அப்போது மூலவர் ஸ்ரீவன்மீகநாதர், பிரதான மூர்த்தியான ஸ்ரீதியாகராஜ சுவாமி மற்றும் விடங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீமரகலிங்க அபிஷேகம் அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தார்.

நிர்மலாசீத்தாராமன்
நிர்மலாசீத்தாராமன்

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

பின்னர், ஸ்ரீரௌத்திர துர்க்கையம்மன் சன்னதி, ஸ்ரீகமலாம்பாள், ஸ்ரீநீலோத்பலாம்பாள் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.  அமைச்சர் நிர்மலாசீத்தராமன் சாமி தரிசனம் செய்தபோது ஆலய சிவாச்சாரியார்கள் அந்தந்த சுவாமி சன்னதிகளின் சிறப்பை எடுத்துசொல்லி தீபாராதனை காண்பித்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இசைக்கு வடிவம் கொடுத்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் திருவாரூர் மேலவடம் போக்கித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் அவதரித்த இல்லத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

Apply for Admission

நிர்மலாசீத்தாராமன்
நிர்மலாசீத்தாராமன்

பின்னர் மேலவடம் போக்கித்தெரு பகுதியில் வேலைபார்த்து கொண்டிருந்த சித்ரா என்ற தூய்மை பணியாளரிடம் நலம் விசாரித்ததோடு, பணியினை சிறப்பாக செய்துவருவதற்கும், நல்லமுறையில் செய்திடவும் அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள பெட்டிகடை ஒன்றில் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என கேட்டறிந்தார்.  தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை மிஸ்டுகால் கொடுக்க சொல்லி பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

—  மணிகண்டன்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.