அங்குசம் சேனலில் இணைய

திருப்பரங்குன்றம் வரை அவர்களது அரசியல் தொடர்கிறது… அமித்ஷா பேச்சுக்கு – சு வெங்கடேசன் பதிலடி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை “1000 ஆண்டு கால பழமையான  திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது” என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு மதுரை எம்.பி.சு வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நேற்று (ஜூன் 8ல்) நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ” இந்த மண்ணின் சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் வணங்கி என் உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கும் போது பெருமைக்குரிய தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியவில்லை என  வருந்துகிறேன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

3,000 ஆண்டுகால வரலாற்று  கொண்ட புனிதமான இடம் மதுரை. ஜூன் 22-ம் தேதி முருகனுக்கான பக்தர்கள் மாநாடு இந்த மண்ணில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அனைவரும் சிறப்பாக நடத்தித் தர வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான 1000 ஆண்டுகால பழமையான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று சொல்லும் துணிச்சலை பெற்றுள்ளது திமுக அரசு.

அமித்ஷா - சு வெங்கடேசன்
அமித்ஷா – சு வெங்கடேசன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முருகன் வழிபாட்டுத்தலத்தை அரசியல் லாபம், பிரிவினை மாதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து திமுக செயல்பட்டு வருகிறது.” என பேசி இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள  பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ” ஆயிரம் ஆண்டு காலம் பழமையான திருப்பரங்குன்றம் மலை” என்கிறார் அமித்ஷா. பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் சனாதனத்தின் சதி இருக்கிறது.

சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் “. என விமர்சித்துள்ளார்.

 

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.