விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா
விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து
மத்திய அமைச்சர் ராஜினாமா
விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதவி விலகிய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்தவர்.
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 20202, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இம் மசோதாக்களுக்;கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியும் இம் மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்;திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவார் என அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ராஜினா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்;த்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளுடன் அவர்களது மகளாக, சகோதரியாக நிற்பதில் தான் பெருமை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.