பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. தனித்துவமான கிராமம்!
தற்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் ஒரு பொருளை என்னதான் பத்திரமாக பூட்டி வைத்தாலும் அதை கொள்ளையடிப்பதற்கென்று தனிப்பட்டாலம் உண்டு, ஆனால் நாம் இந்தியாவில் ஒரு தனித்துவமான கிராமம் இருக்கிறது அங்கு வீடுகளை பூட்டு போடுவது இல்லையாம், கடைகளை பெரிதாக ஆட்கள் கண்காணிப்பது இல்லையாம், ஆனாலும் எதுவும் காணாமல் போவதில்லை நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக தானே உள்ளது ஆம் அப்படி ஒரு கிராமம் நம் இந்தியாவின் நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ”கோனோமா கிராமம்” தான் அது.
நாகலாந்தின் கோனோமா கிராமம், மற்ற கிராமங்களைப் போன்று இல்லாமல், இந்த கிராமம் தனித்துவமான விஷயங்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்கள் தங்களது வீடுகளை பூட்டுவதில்லை கடைகளில் கடைக்காரர்கள் இல்லை, ஆனாலும் எதுவும் காணாமல் போவதில்லை இங்கு அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகின்றன.
இந்த கிராமம் குறித்து பயண வலைப்பதிவர் ஒருவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் இருக்கும் விஷயங்கள்தான் தற்போது இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பதன் படி, அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு புத்தகக் கடையில், கடைக்காரர் இல்லை ஆனால் கடை செயல்படுகிறது. அதற்கு பக்கத்திலேயே ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அந்த பொருளை வாங்கி செல்கிறார்கள். அதேபோன்று காய்கறி கடைக்குள் சென்ற தேவையான பொருட்கள் எடுத்து ஒரு சிறிய பெட்டியில் பணத்தை போடுகிறார்கள். அப்படி இங்கு நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த கிராமத்தின் சில விஷயங்கள் செயல்படுகின்றன.
மேலும் அந்த பயண வலைப்பதிவர் கூற்றுப்படி, கென்யா எனப்படும் அங்கமி பழங்குடியினர் பின்பற்றும் சில பாரம்பரிய நெறிமுறைகள் இங்கு உள்ளன. இதன்படி மக்கள் வாழ மற்றும் நடந்து கொள்ளும் விதங்களுக்கு கிட்டத்தட்ட 154 தடைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் நிறைய வரலாறு எழுதப்பட்டுள்ளது. அதைத் தவிர, கோனோமா கிராமம் வனவிலங்கு பாதுகாப்பில் அதன் முன்முயற்சிகளுக்கு பெயர் பெற்றது. இந்த கிராமம் இந்தியாவின் பசுமை கிராமமாகவும் அறியப்படுகிறது. இந்த கிராமம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.
— மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.